கடலூர்:மாவட்டத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு லட்சத்து
33 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ இலவச பாட புத்தகம்
மற்றும் நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டது.அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்களும், 10ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை அரசு இலவசமாக வழங்கி
வருகிறது.இந்நிலையில், மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் பொருட்டு
தமிழக அரசு, இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ
பாடமுறையை அமல்படுத்தியுள்ளது.அதன்படி, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை
ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் ஒரு புத்தகமாகவும்,
அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் ஒரு புத்தகம் என ஒவ்வொரு
பருவத்திற்கும் இரண்டு புத்தகங்களும், ஒன்று மற்றும் இரண்டாம்
வகுப்புகளுக்கு ஒவ்வொரு பருவத்திற்கும் 40 பக்க நோட்டுகள் தலா நான்கும்,
மூன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 80 பக்க நோட்டுகள் தலா ஐந்தும்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த ஜூன் மாதம் பள்ளி
திறந்ததும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாட புத்தகம் மற்றும் நோட்டுப்
புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.கடந்த செப்டம்பர் மாதம் முதல் பருவ
(காலாண்டு) தேர்வு முடிந்து, விடுமுறைக்கு பின் அக்டோர் 4ம் தேதி பள்ளி
திறந்ததும் இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள்
வழங்கப்பட்டது.
இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தி, விடுமுறை
விடப்பட்டதுமே அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு
மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள்
அனுப்ப அரசு உத்தரவிட்டது.அதன்படி கடலூர் மாவட்டத்தில், 1,075 ஆரம்பப்
பள்ளிகள் மற்றும் 350 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 32
ஆயிரத்து 713 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வித் துறை மூலமும்,
275 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை
படிக்கும் ஒரு லட்சத்து 316 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக்
கல்வித்துறை மூலம் இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் இலவச நோட்டு புத்தகங்கள்
சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.அதனையொட்டி விடுமுறை முடிந்து
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட
புத்தகங்கள் மற்றும் இலவச நோட்டுகள் வழங்கும் பணி துவங்கியது. இந்தப் பணியை
இந்த வாரத்திற்குள் முடித்திட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.