அமெரிக்காவின் சிகாகோ நகரில் "சகோதர சகோதரிகளே' என முழங்கி, இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகே திரும்பிப் பார்க்கச் செய்த வீரத்துறவி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா வரும் 12ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
39 ஆண்டுகளே இந்த மண்ணில் இருந்தவர், ஆனால் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனதில் இருப்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவர். சுவாமி ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடர். எழுச்சியுற வேண்டும் என நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் இவரது கருத்துக்களை இப்போது படித்தால் கூட போதும், வீறு கொண்டு எழுவது திண்ணம்.
இத்தகைய வீரத்துறவிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவருடைய துணிச்சலான கருத்துக்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், தினமலர் இணையதளத்தில், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள், அவருடைய உரைகள், கதைகள், படங்கள் மற்றும் பல விஷயங்களை வெளியிட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் இதைப் பார்த்து, படித்து பயன் பெற வேண்டும். அவரைப் போல் துணிச்சலும் நேர்மை உள்ளவராகவும் வாழ வேண்டும். இந்த புதிய பகுதிக்குச் செல்ல கீழே கிளிக் செய்யவும்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கால மாற்றத்தினாலும் கலாச்சாரச்சீரழிவினாலும் மனிதகுல மாண்புகள் மறைந்து கொண்டிருக்கும் இந்தகாலகட்டத்தில் தடம்மாறி போய்க்கொண்டிருக்கும் இளையசமுதாயத்தை விழிப்படையச்செய்யவும்,நல்வழிப்படுத்தவும் விவேகானந்தரின் சிந்தனைகள் பெரிதும் உதவும்.இதற்கு இணயதளம் மூலம் அடிதளமிட்டிருக்கும் தினமலரின் பணி மிகவும் போற்றிபாராட்டத்தக்கது .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.