அழகிரி - கனிமொழி ஆதரவாளர்கள் அதிர்ச்சி :
விழாவில், கருணாநிதி பேசும் போது, ""இந்த சமுதாய மேன்மைக்காக,
எழுச்சிக்காக, என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்கு
பின் என்ற கேள்விக்குப் பதில், இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின் என்பதை,
நீங்கள்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தி. மு. க. அப்பிடின்னா திராவிட முன்னேற்ற கழகம் அப்பிடின்னு நீங்க நெனைச்சா அது உங்க தப்பு. தி.மு.க. ன்னா திருவாரூர் மு. கருணாநிதி ன்னு விளங்கிக்கோங்க. அதேமாதிரி தமிழ் சமுதாயம் அப்பிடின்னா கருணாநிதியோட குடும்பமும் மேற்படி குடும்பத்தோட சம்பந்தப்பட்ட சமுதாயமும் அப்படின்னு அர்த்தம். அந்த பெரிய தமிழ் குடும்ப சமுதாயத்துக்கு தி.மு.க. தான் நிரந்தர தலைவர். யுப்போ புரிஞ்சுதா?
என்னதான் இருந்தாலும் ஒரு குடும்பத்தில் கடைக்குட்டி மீதுதான் பாசம் இருக்கும் என்பதை பகுத்தறிவு பகலவன் விளக்கியுள்ளார். தனக்கு பின் தனது செல்லப்பிள்ளை ஸ்டாலின்தான் தலைவராக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறியுள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் அவர் தனது சொத்திற்கு தலைமை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தால் பரவாயில்லை, தி.மு.க. என்ற ஒரு கட்சிக்குத் தலைமை ஏற்பார் என்று கூறுவதுதான் வியப்பாக இருக்கிறது. தி.மு.க.வை இவரா தோற்றுவித்தார். அறிஞர் அண்ணா அப்படி நினைத்திருந்தால் தனது குடும்ப வாரிசுக்கு அல்லவா இந்த கழகம் சென்றிருக்கும். பகுத்தறிவு பேசும் இந்த பெரியவருக்கு இது தெரியவில்லையா? அல்லது மனசில்லையா? தி.மு.க. என்பது ஒரு பொதுசொத்து, எத்தனை உடன்பிறப்புக்கள் இக்கட்சிக்காக உழைக்கின்றனர். அவர்களில் யாருக்கும் தலைவராகும் தகுதி இல்லையா? இந்த வயதிலும் இக் கட்சிக்கு தலைவராக இருப்பதே பெரிய குற்றம். கட்சிக்காக பாடு பட்ட ஒரு நபரை தலைவராக்கி இவர் அந்தக் கட்சியின் தொண்டாக மாறியிருந்தால் இவர் பகுத்தறிவுவாதி என்று பாராட்டலாம், ஆனால் பல கோடிபேர் வளர்த்த கட்சியை தனக்கு பின் தன் தனையன் என்று அறிவித்தது மானக்கேடான விஷயம், இந்த விஷயத்தில் ம.தி.மு.க. எவ்வளவோ மேல், இதுவரை வைகோவின் உறவினர்கள் கட்சியின் எந்த பொறுப்பிற்கும் வராதது. உண்மையில் உண்மையான ஒரு தலைவன் என்ற பெயரை வைகோவிற்கு பெற்றுத்தரும்.
அழகிரிரியைவிடவும் கனிமொழியை விடவும் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியானவர் என்று மு.க. நினைக்கிறார்.ஸ்டாலினை விடவும் தகுதியானவர்கள் அக்கட்சியில் இல்லையா/ இருந்தும் தலைவர் பதவியை தன குடும்பத்தைவிட்டு வெளியாட்களுக்குக் கொடுக்க மனமில்லையா? அப்பதவி என்ன கருணாவின் குடும்ப சொத்தா ,சரிசரி இது அவர்கள் உள்கட்சிப் பிரச்சினை.அவர்களே பேசித்தீர்த்து ஒரு முடிவுக்கு வரட்டும்.வெளியாட்கள் ஏன் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கவேண்டும் அவர்கள் தலைவரை அவர்களே தேர்வு செய்யட்டும் ,அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்தானா என்பதை பொதமக்கள் முடிவு செய்யட்டும்.
சாகும் வரை பதவி எனக்கே என்று சொல்லுவதிலேயே பதவி வெறி தெரிகிறது , மத்தபடி தமில்சமுதயம் என்பதெல்லாம் சும்மா , குடும்ப நன்மை என்பதை மாற்றி சொல்லிவிட்டார் , மன்னியுங்கள்., செத்தாலும் இவரது ஆவியே அங்கு தலைவர், இதுவரை தலைவர் பயன் படுத்திய அணைத்து செருப்புகளையும் பொருக்கி வைத்து கொள்ளுங்கள், அவர் காலத்திற்கு பிறகு எல்லோரும் தலையில் வைத்து ஆட்சி நடத்த வசதியாய் இருக்கும்.
ஸ்டாலின் சிறு வயது முதல் கட்சியில் ஈடு பட்டு உள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்து இருக்கிறார். அவர் அந்த பதவிக்கு வருவதில் தப்பில்லை. அவர் ஒன்றும் நேற்று கட்சியீல் சேரவில்லை. அவர் மட்டும் தான் அந்த பதவிக்கு சரி யானவர்... அவரை விட யாரும் திறமையானவர் தி மு க வில் இல்லை... மத்த எல்லாரும் அல்லக்கை தான்... சொம்பு... கட்சி கொஞ்சம் action எடுத்தால், பல்டி அடிக்கும் அல்லகைகள்...எனவே, ஸ்டாலின் தான் கரெக்ட் சாய்ஸ்... நான் தி மு க இல்லை... நடு நிலையான ஆள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.