New problem comes for visvarupam | விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல் : இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல் : இஸ்லாமிய கூட்டமைப்பு எச்சரிக்கை

Updated : ஜன 04, 2013 | Added : ஜன 04, 2013 | கருத்துகள் (75)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல்

சென்னை: "விஸ்வரூபம் படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன் வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும்' என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம்' படம், இம்மாதம், 11ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக, டி.டி.எச்., வசதி மூலம், "டிவி'யில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, சினிமா தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினரும், தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்பினாலும், படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படப் பிரச்னை தொடர்பாக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா கூறியதாவது:

"விஸ்வரூபம்' படத்தின், "டிரைலர்' வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது, படத்தில், இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என, சந்தேகம் ஏற்படுகிறது.

இதனால், இப்படத்தை எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, பிரத்யேகமாக திரையிட்டுகாட்ட வேண்டும் என, கேட்டோம். எங்களின் ஐயத்தை போக்கவேண்டிய நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். படம் வெளியாவதற்கு முன்பாக, எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும். இல்லையென்றால், பட வெளியீட்டிற்கு, ஜனநாயக வழிகளில், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, முகமது ஹனீபா தெரிவித்தார்.


தியேட்டரில் திரையிடமாட்டோம் :

"டி.டி.எச்., என்பது, தியேட்டர், சினிமா தொழிலை மெல்ல கொல்லும், "சயனைடு' விஷம். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைக்கும் முயற்சி. டி.டி.எச்.,ல் வெளியாகும் கமல், மணிரத்னம் என, யார் படமாக இருந்தாலும், தியேட்டரில் ஓட்டமாட்டோம்' என, திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கூட்டத்தில், "டி.டி.எச்.,ல் வெளியிடப்படும் எந்த சினிமாவையும், தியேட்டரில் திரையிடமாட்டோம். வினியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


"விஸ்வரூபத்திற்கு' தடை கோரிய வழக்கு :

"நடிகர் கமல் நடித்துள்ள, விஸ்வரூபம் படம், 90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கு பாதிப்பு ஏற்படும்' என, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ரெஜன்ட் சாய்மீரா நிறுவனம் சார்பில், ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனு: மர்மயோகி படத்துக்காக, நடிகர் கமல், எங்களிடம் பணம் பெற்றார். இப்படம் தயாரிக்கப்படவில்லை. எங்களுக்கு, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. 10.50 கோடி ரூபாய், தருவதற்கு உத்தரவிடக் கோரி, கமலுக்கு எதிராக, வழக்கு தொடுத்துள்ளோம். விஸ்வரூபம் படத்தை வெளியிட்டு விட்டால், எங்களுக்கு பணம் கிடைக்காது. எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரர் சந்திரஹாசன், தாக்கல் செய்த பதில் மனு: மர்மயோகி படத்தால், ஓராண்டு காலம், கமலுக்கு வீணாகி விட்டது. அதன் மூலம், 40 கோடி ரூபாய், அவருக்கு இழப்பு ஏற்பட்டது. சாய்மீரா நிறுவனத்துக்கு, எந்தப் பாக்கியும் இல்லை. விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களை வெளியிடும் போது, பணத்தை திருப்பிச் செலுத்துவதாக, எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
கோர்ட் நடவடிக்கைகளை, மனுதாரர் தவறாக பயன்படுத்துகிறார்.

மனுதாரர் கோரியது போல், தடை விதித்தால், எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும். தமிழிலும், இந்தியிலும், விஸ்வரூபம் படத்தை தயாரிக்க, 90 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.படம் வெளியாக, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கும் பாதிப்புஏற்படும். எங்களுக்கு இடையூறு செய்வது தான், மனுதாரரின் நோக்கம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையை, இம்மாதம், 8ம் தேதிக்கு, நீதிபதி வி.கே.சர்மா தள்ளி வைத்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
04-ஜன-201319:29:27 IST Report Abuse
ராம.ராசு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ள "தணிக்கைக்" குழு என்ற ஒன்று இருக்கும்போது, படத்தை முழுமையாகப் பார்க்காமல் "இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ" என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்லாமிய கூட்டமைப்பு தங்களிடம் காட்டிவிட்டுத்தான் திரையிடப்பட வேண்டும் என்பது உட்சபட்ச எதிர்ப்பு / எதிர்பார்ப்பு. பிறகு அரசின் தணிக்கைக் குழுதான் எதற்க்காக...? எது எதற்குத்தான் எதிர்ப்பு தெரிவிப்பது என்ற கட்டுப்பாடே இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
arul - chennai,இந்தியா
04-ஜன-201318:27:46 IST Report Abuse
arul இது என்ன புதிய செய்தியாக இருக்கிறதே, இந்திய தணிக்கை குழு வேலைகளை இன்று இவர்கள் செய்தால் நாளை இவர்கள் அரசாங்கத்தை மிரட்டுவார்கள், இது ஜனநாயக நாடு என்பதற்காக தாவராக பயன்படுத்த கூடாது .
Rate this:
Share this comment
Cancel
Mohamed Iqbal - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-201317:54:33 IST Report Abuse
Mohamed Iqbal நாங்கள் மத நல்லிணத்திற்கு பாடு படும்போழுது இந்த சினிமாக்காரர்கள் அதை கெடுக்கும் விதமாக நடந்துகொள்கிறார்கள். முன்பு பலமுறை கமலஹாசனுக்கு நினைவுட்டப்பட்ட விஷயம் தான் இது. சினி தயாரிப்பாளர்கள் இதை அலட்சியாமாகவே கருதுகிறார்கள். முஸ்லிம் இயக்கங்களின் இந்த எச்சரிக்கை பலருக்கு எரிச்சலையூட்டினாலும் இதனை நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Gopalan - Chennai,இந்தியா
04-ஜன-201317:36:44 IST Report Abuse
Narayanan Gopalan நசுக்கப்ப் பட வேண்டிய நடவடிக்கை
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஜன-201316:58:34 IST Report Abuse
Pannadai Pandian விஜய் துப்பாக்கி படத்துக்கு இப்படித்தான் குடைச்சல் கொடுத்தார்கள். இப்போது விஸ்வரூபம் படத்துக்குமா ??? தீவிரவாதிகளை பற்றி சொன்னால் ஏன் இவர்களுக்கு உதைக்கிறது ??? தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. கசாபை தூக்கில் போட்டதில் பாகிஸ்தானிய மக்களுக்கும் சந்தோசம்தான். பாலிவூட் இப்போது கராச்சி கையில் உள்ளது. கோலிவூட்டும் இவனுங்க கைக்கு போவனுமா ??? சினிமா என்பது நிஜத்தை நிழலாக காட்டுவது. அதில் கண்டிப்பாக உண்மை உள்ளது. 70 களில் பிராமணர்களை கிண்டல் செய்தும், தற்போது போலீசையும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தும் படம் தயாரிக்கிறார்கள். நீங்கள் அதை பொய் என்று கூற முடியாது. அது போல தீவிரவாதம் என்பது முஸ்லிம் மதம் சம்பந்த பட்ட ஒரு தீச்செயல். சினிமாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளை சித்தரித்தால் அதனை சீரியசாக எடுத்துக்கொண்டு தீவிரவாதிகளுக்கு புகலிடம் தராதீர்கள். அதுவே தவறை நீங்கள் திருத்துவதற்கு உதாரணம். காஷ்மீரில் பாருங்கள் பாகிஸ்தான் கொடியை எல்லா இடத்திலும் ஏத்துறாங்க, நமது ஜவான்களை கல்லால் துவம்சம் செய்கிறார்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்கிறார்கள். இது இந்தியா முஸ்லிம்களுக்கு வெக்கம் இல்லையா ??? கேவலம் இல்லை, அல்லது வேறு விளக்கம் கொடுத்தால் உங்களுக்கும் வியாதி உள்ளது என்று அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
04-ஜன-201315:57:28 IST Report Abuse
Skv ஒரு பழமொழி உண்டு ஆனை குட்டி போடும்போடும் நு காத்திருக்க ஆனை லத்தி போட்டு போச்சாம்னுவாக் , ஓவர எக்ச்பெகடேஷன் காதுலே பூனு ஆயுடப்போவுது
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஜன-201315:43:53 IST Report Abuse
விருமாண்டி யார் தீவிரவாதி என்று மக்களுக்கு மீண்டும் தெளிவு படுத்தும் படம்
Rate this:
Share this comment
Cancel
Ambedkumar - Chennai,இந்தியா
04-ஜன-201315:41:19 IST Report Abuse
Ambedkumar சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே தமிழ்நாடு குட்டிசுவராகிறது இந்தப்படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதனால் நாட்டுக்கு என்ன நன்மை?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஜன-201315:33:25 IST Report Abuse
g.s,rajan விஸ்வரூபம் பட பிரச்சனை "விஸ்வரூபம்" எடுத்திருச்சு போல இருக்கு ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
04-ஜன-201315:10:38 IST Report Abuse
KMP முடியாது அவசியம் இல்லை ///
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை