மதுரை: திண்டுக்கல்லில், பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தது குறித்து, நேற்று, "தினமலர்' நாளிதழ் முதல் பக்கத்தில் போட்டோ வெளியானது. இதை ஆதாரமாகக் கொண்டு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதி, உள்துறை செயலாளர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. நேற்று, "தினமலர்' நாளிதழ் முதல் பக்கத்தில், படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியவாறு பயணிப்பது குறித்து, படம் வெளியானது. இதை வழக்கறிஞர், என்.எஸ்.பொன்னையா, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.ராஜா கொண்ட, "பெஞ்ச்' முன்னிலையில் குறிப்பிட்டார்.
கமிஷனருக்கு, பெஞ்ச் உத்தரவு:
இதை ஆதாரமாகக் கொண்டு, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இதுபோல் ஏற்கனவே, சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள், நான்கு பேர் பலியாயினர். இதை, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தானாக முன்வந்து, 2012 டிச., 11ல், ஐகோர்ட் முதன்மை பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை போக்குவரத்து கமிஷனருக்கு, பெஞ்ச் உத்தரவிட்டது. பஸ் படிக்கட்டில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வது பற்றி, நேற்று, "தினமலர்' நாளிதழில் போட்டோ பிரசுரமாகியுள்ளது. ஏற்கனவே, சென்னையில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் பலியானது போன்ற சம்பவங்கள், இனியும் தொடரக் கூடாது.
முதன்மை பெஞ்ச் உத்தரவின் வழிகாட்டுதல் படி, இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத உள்துறை செயலர், டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி., மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதி, நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க, நோட்டீஸ் அனுப்ப, இந்த பெஞ்ச் உத்தரவிடுகிறது.
ஜன., 24 தேதி, மீண்டும் விசாரணை:
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, உள்துறை செயலர் உத்தரவிட வேண்டும். மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு, ஜன., 24 தேதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தனியார் பேருந்துகளிலும் இலவச பயணம் அனுமதிக்கலாம் அப்போது கூட்டம் குறைய வாய்ப்பு ஏற்படும். மேலும் ஷிப்ட் முறையில் பள்ளிக் கல்லூரி, என வெவேறு நேரத்தில் வகுப்புகளைத் தொடங்கலாம். காலை 7.30 மணி, 11.00 மணி, மாலை 5 மணி என்று பிரித்து வகுப்புகளை ஆரம்பிக்கலாம். இப்படி செய்தால் கூட்டத்தை மூற்று பங்காகக் குறைக்கலாம் மேலும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதித்தால் அரசுப் பேருந்துகளின் வருமானம் கூடும். பேருந்துக் கட்டணம் உயர்த்தும்போது தனியார் பேருந்துகளும் தங்கள் கட்டணத்தை உயர்த்துகின்றனவே? லாபம் மட்டும் தனியாருக்கு நஷ்டம் அரசுப் பேருந்துகளுக்கா? கேரளாவில் தனியார் பேருந்துகளில் தான் மாணவர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். அதுவும் குறைந்த கட்டணத்தில். இலவசமாக அனுமதிப்பதில்லை.
படிகளில் பயணம் செய்யும் மாணவர்களை இடை நீக்கம் செய்யலாம் என்றால் அவர்களுக்கு சரியான பேருந்து வசதி இருந்தால் ஏன் அவர்கள் தொங்கி கொண்டு போக போகிறார்கள் என்னை கேட்டால் மகளிர் மட்டும் பேருந்து என்பது போல் பள்ளிக்கு மட்டும் என்று தினம் காலை ஐந்து ,மாலை ஐந்து என்று ஒரு ரூட் கு பேருந்து விட வேண்டும் அப்படி செய்து அதையும் மீறி படியில் தொங்கினால் நடவடிக்கை எடுக்கலாம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.