ராமநாதபுரம்: பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்களின், "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்பு, முதல் பரிசை தட்டிச் சென்றது. தமிழகம் முழுவதும் இருந்து, 93 பள்ளிகள் சார்பில், 96 வகையான அறிவியல் சார்ந்த படைப்புகள், இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், ராமநாதபுரம் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் பாலமுருகன், பாசில் தயாரித்த, "இந்தோ- இலங்கை மின் திட்டம்' என்ற படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
இதுகுறித்து இவர்கள் கூறியதாவது: இயற்கை முறையை பயன்படுத்தி, எவ்வாறு மின் உற்பத்தி செய்வது' என்ற தலைப்பை தேர்வு செய்தோம். இன்றைய சூழலில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில், தொழிற்சாலைகளை துவங்க, பல நாடுகள் முன் வந்துள்ளன.
100 அடிக்கு ஒரு காற்றாலை:
இந்நிலையில், நமக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது மின்சாரம். மின் உற்பத்திக்கு, இந்தியா பல திட்டங்களை வகுத்து வந்தாலும், பற்றாக்குறை தொடர்கிறது. இதை சரிசெய்ய உருவாக்கப்பட்டதே,"இந்தோ- இலங்கை மின் திட்டம்'. இந்தியாவின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் கோடியக்கரை- இலங்கைக்கு இடையே (18 கடல் மைல்) கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால், முதல்கட்டமாக பாலத்தின் பக்கவாட்டில், 100 அடிக்கு ஒரு காற்றாலை வீதம், இருபுறமும் தலா 300 காற்றாலைகள் நிறுவ வேண்டும். ஒரு காற்றாலை மூலம் 100 "மெகாவாட்' வரை, மின்சாரம் தயாரிக்கலாம். 300 காற்றாலைகள் மூலம், மொத்தம் 60 ஆயிரம் மெகாவாட் வரை, மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது "பாலமாக' அமையும் :
இரண்டாம் கட்டமாக, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், சோலார் பேனல்களை (தகடுகள்) பொருத்தி, அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மூன்றாம்கட்டமாக, பாலத்தின் கான்கிரீட் தூண்களில் அமைக்கப்படும் "டைடல் வேவ் எனர்ஜி' மூலம் கடல் அலைகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் உருவாக்க குறைந்தது 1,000 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், மின் தட்டுப்பாடு என்ற பிரச்னையே இருக்காது. இந்தியா- இலங்கை நட்புறவுக்கு, இது "பாலமாக' அமையும். இந்த திட்டத்தின் மாதிரி அமைக்க, ஒரு மாதம் ஆனது. பள்ளி தாளாளர் ராஜமாணிக்கம், முதல்வர் சகாயமேரி, ஆசிரியர் ஜோசப் ஆகியோர் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதால், ஜன., 20 ல் கர்நாடகாவில் நடைபெறவுள்ள, தென்னிந்திய அளவிலான கண்காட்சியிலும் பங்கேற்க தயாராகி வருகிறோம், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எக்ஷெல்லெண்ட் ஐடியா பட் கொஞ்சம் கஷ்டம்தான் இந்த ப்ளன முடிக்குறது, ஏன்ன ரெண்டு நாட்டுக்கும் நடுவுல பாலம் கட்டும் பொது கண்டிப்பா அந்த இடங்களில் ஆர்மி நேவி வேணும் ஆர்மி நேவி வந்தால் அந்த ஏரியாவுல மீன் பிடிக்க விடமாட்டங்க அதுவும் இல்லாம அந்த ஏறிய மக்களை காலி பண்ணனும் இன்னும் ரெண்டு மூணு பிரச்சனி இருக்கு பட் அத எல்லாம் இதுல சொன்ன எதாவது பிரச்னை வரும்............... எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் கொவபடதிங்க ok

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.