உயர்கிறது டீசல் விலை?: இம்முறை காஸ், மண்ணெண்ணெய்யும் தப்பாது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: நிதிப்பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஜய் கேல்கர் கமிட்டி அறிக்கையை தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்க மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் விஜய் கேல்கர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த அறிக்கையில், உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துதல் மற்றும் வரும் 2014 -15ம் ஆண்டிற்குள் டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையையும் உயர்த்த இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கமிட்டி அறிக்கையின் படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, விஜய் கேல்கர் கமிட்டி அறிக்கை, தற்போது திட்ட அளவில் மட்டுமே உள்ளதாகவும், இதுகுறித்து மத்திய அமைச்சரவையே இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போது டில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 47.15 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கேல்கர் கமிட்டி அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 5.63 வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கடந்த 2011 ஜூன் முதல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. கேல்கர் அறிக்கைக்குப்பின், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மானிய விலையில் 6 காஸ் சிலிண்டர் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.abdulkasim - Melur(Madurai),இந்தியா
05-ஜன-201307:28:21 IST Report Abuse
n.abdulkasim தி.மு.க.வை திட்ட அ.தி.மு.க வுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-ஜன-201306:20:36 IST Report Abuse
g.s,rajan "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப்போகட்டும் " என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நினைத்துவிட்டன போலும் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
pkd - vollore  ( Posted via: Dinamalar Android App )
05-ஜன-201305:53:46 IST Report Abuse
pkd மத்தி்ய அரசு என் டிசல் விலை மட்டும ஏற்றுகிறது
Rate this:
Share this comment
Cancel
05-ஜன-201305:46:16 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆரம்பிச்சுட்டீங்களா உங்க வேலையை? என்னடா எரி பொருளில் கை வைக்கவில்லையே என்று பார்த்தேன். நீங்க வாங்க அப்பு தேர்தலில் நாங்க எங்க வேலையை காட்டுறோம். கவலையே படாதீங்க. நாட்டை ஆள தெரியாத உங்களுக்கு ஆப்பு தான்...................
Rate this:
Share this comment
Cancel
guru - kaf,ஆப்கானிஸ்தான்
05-ஜன-201305:37:52 IST Report Abuse
guru நிதி பற்றாக்குறை என்று வரியை மேலும் மேலும் ஏற்றி எதாவது ஒரு வழியில் ஊழல் செய்து அவங்க வீடு கஜானாவை உயர்த்தி கொள்ளவே நிதிபற்றாக்குறை என்ற அறிக்கை மக்களின் ரத்தம் தான் அவங்க குடிப்பது ,,,,,,
Rate this:
Share this comment
Cancel
RAMESH KUMAR S - KUMBAKONAM,இந்தியா
05-ஜன-201301:12:04 IST Report Abuse
RAMESH KUMAR S இவனுங்க எல்லா நிதியையும் ஆட்டயை போட்டனுங்கான ஏது நிதி ?
Rate this:
Share this comment
Cancel
RAMESH KUMAR S - KUMBAKONAM,இந்தியா
05-ஜன-201300:17:38 IST Report Abuse
RAMESH KUMAR S நிதிப்பற்றாக்குறை நிதிப்பற்றாக்குறை நிதிப்பற்றாக்குறை ........ இவனுங்க ஊழல் பண்ண மட்டும் ஏது நிதி ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜன-201319:38:45 IST Report Abuse
Pugazh V ஆஹா கேரளாவில் ஒரு நாள் பந்த் நடக்குமே, ஜாலி
Rate this:
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
04-ஜன-201319:33:24 IST Report Abuse
Vignesh ஏன் இந்த கமிட்டி மத்திய அமைச்சர்களின் வீட்டில் எவ்வளவு காஸ் வாங்குகின்றனர், அவர்களும் அவர்கள் குடும்பமும் ஒரு மாதர்த்திர்க்கு அரசாங்க செலவில் எவ்வளவு பெட்ரோல், டீஸல் வாங்குகிரார்கலென்றெல்லாம் பார்க்கமாட்டார்களா?
Rate this:
Share this comment
Cancel
குமார் - பெங்களூரு,இந்தியா
04-ஜன-201319:15:29 IST Report Abuse
குமார் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது.(பொருளாதாரம் ) படித்த மேதை அனைத்தையும் வேறு எங்கோ அடமாணம் வைத்துவிட்டார், நம் பொருளாதார மேதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்