ஊட்டி: ""ஊட்டி, நஞ்சநாடு சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, 5 கோடி ரூபாயில் புதிய கூட்டுறவு தொழிற்சாலை துவக்கப்படும். மேட்டுப்பாளையத்தில், 15 கோடி ரூபாயில், "தேயிலை குழும பொது வசதி மையம்' (டீ கிளஸ்டர் சென்டர்) அமைக்கப்படும்,'' என்று, எடக்காட்டில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகேயுள்ள எடக்காட்டில், குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் பொன்விழா நேற்று நடந்தது.
"இன்கோ சர்வ்' டீ விற்பனை:
விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: குந்தா தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை, உற்பத்தியை 1962ல் துவக்கி, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தொழிற்சாலை துவக்கப்பட்டபின், நீலகிரியில் மேலும், 15 கூட்டுறவுத் தொழிற்சாலைகள் உருவாகின. இவற்றை ஒருங்கிணைக்கும் அமைப்பாக, "இன்கோ சர்வ்' உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிக்க, 15 தொழிற்சாலைகளை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு, 5.46 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. "இன்கோ சர்வ்' டீ விற்பனையை அதிகரிக்க, 2011ல், பொது வினியோகத் திட்டத்தில், "ஊட்டி டீ' விற்பனை துவக்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில், 317 லட்சம் கிலோ டீ, 280 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது; இதில், 26 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள் :
குந்தா தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு பொன்விழா ஊக்கத்தொகையாக அதிகபட்சமாக, 3,000 ரூபாயும், பணியாளர்களுக்கு அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். ஊட்டி, நஞ்சநாடு பகுதி சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, 5 கோடி ரூபாயில் புதிய கூட்டுறவு தொழிற்சாலை துவக்கப்படும். மேட்டுப்பாளையத்தில், 15 கோடி ரூபாயில், "தேயிலை குழும பொது வசதி மையம்' (டீ கிளஸ்டர் சென்டர்) அமைக்கப்படும். இங்கு, சேமிப்பு கிடங்கு, தேயிலைத் தூள் பாக்கெட் செய்தல், சேமிப்பு அறை, சந்தை மையம் செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.
இடையிடையே மூன்று குட்டிக்கதைகளை கூறினார். எழுத, படிக்கத் தெரியாத கோவில் ஊழியர் வேலையிழந்து, அதன்பின், சைக்கிளில் டீ விற்று வாழ்க்கையில் முன்னேறியது; காலணி அணியும் பழக்கமில்லாதவர் ஊரில் காலணி வியாபாரம் துவக்கியது, அதில் வெற்றி கண்டது; உழைக்காதவருக்கு சுகபோக வாழ்வு கிடைக்காது என்ற உட்கருத்துகளுடன் கதைகள் அமைந்திருந்தன.
மாநில தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் ஹர்மந்தர்சிங் வரவேற்றார். பொன்விழா மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகன் பெற்றுக்கொண்டார். "இன்கோ சர்வ்' தயாரிப்பிலான, 250 கிராம் அளவிலான, "ஊட்டி டீ' விற்பனையை முதல்வர் துவக்கி வைக்க, நெடுஞ்சாலைத்துறை ஆணையர் நிரஞ்சன் மார்டி பெற்றுக்கொண்டார்.
ஊட்டி தேயிலை விற்பனை துவக்கம் :
""மேட்டுப்பாளையத்தில், 15 கோடி ரூபாயில், "தேயிலை குழும பொது வசதி மையம்' (டீ கிளஸ்டர் சென்டர்) அமைக்கப்படும்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நீலகிரி மாவட்டம், எடக்காட்டில் நடந்த விழாவில், ஜெயலலிதா பேசியதாவது:ஊட்டி, நஞ்சநாடு பகுதி சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி, 5 கோடி ரூபாயில் புதிய கூட்டுறவு தொழிற்சாலை துவக்கப்படும்.
மேட்டுப்பாளையத்தில், 15 கோடி ரூபாயில், "தேயிலை குழும பொது வசதி மையம்' அமைக்கப்படும். இங்கு, சேமிப்பு கிடங்கு, தேயிலைத் தூள் பாக்கெட் செய்தல், சேமிப்பு அறை, சந்தை மையம் செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார். "இன்கோ சர்வ்' தயாரிப்பிலான, 250 கிராம் அளவிலான, "ஊட்டி டீ' விற்பனையை முதல்வர் துவக்கி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நஞ்சநாடு: நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதி..
எங்கள் ஊரு நஞ்சநாடு என்று சொல்வதற்கு கர்வமாக இருந்தது ஒரு காலத்தில் ஆனால் சமீப காலமாக எங்கள் ஊரில் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக அனைத்து மக்களும் சந்தோசமின்றி உள்ளனர் இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு சற்று ஆறுதலை தந்துள்ளது, நஞ்சநாடு மக்களின் பல வருட கனவு நிறைவேறியுள்ளது ...
நஞ்சநாடு மற்றும் படுகர் இன மக்களின் நன்றி தமிழக முதல்வர் அவர்களுக்கு ..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.