புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்துள்ள விவரம், தெரியவந்துள்ளது.
பிரதமர், துணை பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் ஆகியோர் மட்டுமே, விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணிக்க முடியும். பிரதமருக்கு மட்டும், இதில் விலக்கு உண்டு.இந்நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ரமேஷ் வர்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில், காங்., தலைவர் சோனியா, காங்., பொதுச் செயலர் ராகுல் ஆகியோர், பயணம் செய்ததன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்திருந்தார்.
ராணுவ அமைச்சகம் பதில்: சோனியா, ஏழு ஆண்டுகளில், 49 முறை, விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துள்ளார். இவற்றில், 28 முறை, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், ஆறு பயணங்கள் அரசுத் துறை தொடர்பானவையும் ஆகும். காங்., பொதுச் செயலர் ராகுல், மூன்று ஆண்டுகளில், எட்டு முறை பயணித்துள்ளார். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதற்க்கு ஒரே நிவாரணம், நாம் தினமலர் பத்திரிக்கை வழியாக நம் கருத்துக்களைக் கொட்டித் தீர்த்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறுவதை விட வேறு ஒன்றுமே இல்லை . நடப்பதுதான் நடக்கும், கேள்வி கேட்டால் நாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போக வேண்டி வரும், நேரடியாக கடிதம் எழுதினால் சட்டம் நம் மீது பாயும்,. ஆகவே நம் குறைகளை இடிதாங்கியாய் , சுமைதாங்கியாய் நம்மக்கு ஆறுதல் கூற தினமலரை விட்டால் வேறு வழி இல்லை என்பதே உண்மை. நாம் தொடர்ந்து எழுதுவோம், ஆறுதல் அடைவோம், வந்தே மாதரம்
அவங்க குடும்ப சொத்தை அவங்க பயன் படுத்துறாங்க......இதெல்லாம் கேள்வி கேட்கலாமா?......நாடே அவங்களுக்கு கடமை பட்டிருக்கு............இந்தியாவில் இருக்கும் சொத்தை எல்லாம் வெளி நாட்டில் பாதுகாப்பாக வைத்து , நமக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க..........அவங்க ஹெலிகாப்டரில் என்ன, புஷ்பக விமானத்தில் கூட போகலாம்........

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.