வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவில், நவம்பரில் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு,31, பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர்.
துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார். இது குறித்து துளசி கூறியதாவது:
என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு துளசி கூறினார். ஹவாய் சட்டசபை உறுப்பினராக, 21 வயதில் பதவி ஏற்றவர் துளசி. வளைகுடா போரில் பங்கேற்பதற்காக, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
கலிபோர்னியாவிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அமி பெராவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை குஜராத்தை சேர்ந்தவர். அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வாகியுள்ள மூன்றாவது இந்தியர் அமி பெரா. 1950ல், தலிப் சிங்கும், 2005ல், குடியரசு கட்சி சார்பில், பாபி ஜின்டாலும், எம்.பி.,யாக பதவி வகித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பகவத் கீதை மீது இவர் கூறிய கருத்துகள் சரியானவை... கீதையை வைத்து பதவி உறுதி மொழி எடுத்து கொண்டது நல்ல அரசியல் நிர்வாகத்திற்கு சிறப்பானவை..,கீதையை பின்பற்றுபவர்கள் உலகின் உயர்ந்த நிலைக்கு தர்மத்தை நிலை நாட்ட படவேண்டும். சிறப்பாக கீதை படித்த மகாத்மா - அகிம்சை என்ற ஒரு நல்ல மனித தர்மத்தை நிலை நாட்டியுள்ளார்..., இதுபோல் உலக நன்மைக்காக சிறப்பாக தம் பொதுப்பணி ஆற்ற இனிய நல் இந்திய வாழ்த்துக்கள் பூபதியார்
மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அதில் அரசியல் கலக்கும்போதுதான் பிரச்சினை ஆகின்றது. உண்மையான சகிப்புத்தன்மை, மத சார்பின்மை அங்குதான் உள்ளது. யார் என்ன மதத்தில் இருந்து வந்தார்கள் வருகின்றார்கள் என்று அவர்கள் பார்க்கவில்லை நாட்டிற்கு எவ்வாறு அவர்கள் நல்லது செய்கின்றார்கள் என்பதைத்தான் அமெரிக்கன் பார்க்கின்றான். அவர்கள் வேற்று நாட்டவர்கள் அனாலும்....... இங்கு சோனியாவை இதனுடன் ஒப்பிட வேண்டாம். சோனியா இந்தியரை திருமணம் செய்துகொண்டாலும் 20 ஆண்டுகள் கழித்துதான் இந்திய குடியுரிமைக்கு apply செய்தவர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.