பொங்கல் படி :
தமிழகத்தில் மழையின்மை, தண்ணீர் கிடைக்காமை உள்ளிட்ட பிரச்னைகளால், கொண்டாட்டங்களை மக்கள் தவிர்த்துவிடக் கூடாது என்பதற்காக, பொங்கல் பரிசு ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் படி, அரிசி பெறும், 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பண்டிகைக்காக, 160 ரூபாய் மதிப்பிலான, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது. இதில், 20 ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ பச்சரிசியும், 40 ரூபாய் மதிப்பில், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப் படுகிறது.பொங்கல்பண்டிகைக்கான இதர
பொங்கலுக்குள் சாத்தியமா? :
பொங்கல் பண்டிகைக்காக, முதல்வர் ஜெயலலிதா, அரிசி, சர்க்கரை மற்றும், 100 ரூபாய் ரொக்கப்பணம் என்ற பொங்கல் பரிசை அறிவித்துள்ளார். இதை, இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க வேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடைகளில் வினியோகம் இருக்காது. நாளை திங்கள் கிழமை முதல், சனிக்கிழமை வரை என, ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன. அரிசியைப் பொறுத்தவரை, பொங்கலுக்கான அரிசி ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்டு, தயாராக உள்ளது. இந்த அரிசியை தேவையான அளவிற்கு வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரையை கொள்முதல் செய்து, ஒவ்வொரு கிலோவாக, பாக்கெட்டில் அடைக்க வேண்டியுள்ளது. இதற்கும் குறிப்பிட்ட காலம் எடுக்கும்.இதுதவிர, ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும், 100 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க வேண்டும். நாளை முதல் ஆறு நாட்கள்,ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், தேவையான அளவு பணத்தை, வங்கியில் இருந்து எடுத்து, விநியோகிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் இது சாத்தியப்படுமா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த 100 ருபாய் பணத்தை வாங்கி கொண்டு அம்மாவை வசை பாடுகின்றவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். " கடை தேங்காயோ...வழி பிள்ளையாரோ" என்று எனவே மறு பரிசீலனை செய்வது நன்று
பிச்சைக்காரனுக்கு 1 ரூபாய் பிச்சை போடுவதை காட்டிலும் அந்த 1 ரூபாயை சம்பாதிக்க வழி செய்து கொடுத்தால் நாளை மீண்டும் அந்த 1 ரூபாயை எதிர் பார்த்து ஏங்கி நிற்க மாட்டான்...பிச்சை கொடுக்கா விட்டால் ஏசவும் தயங்க மாட்டான்...
நாம் கண்ணார கண்டிருக்கிறோம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.