சில வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரஜினியின், "வாய்ஸ்' பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய களங்கள்.ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, சக நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர். ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்' என, குறிப்பிட்டார்.
அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த பேச்சால், ஏமாந்து போன ரசிகர்களுக்கு, அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி. தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட, மத்திய அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் அழைப்பு விடுக்காத நிலையில், தானாகவே அரசியல், பேச ஆரம்பித்தார்.அவர் பேசும்போது, ""ஒரு ரசிகனை போல், எப்ப அரசியலுக்கு வருவீங்கன்னு, அமைச்சர் சிதம்பரமே கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், "என் வழி தனி வழி' என்று ரசிகர்களை சூடேற்றினார்.ரஜினிக்கு பின் பேசிய கருணாநிதி, "ரஜினியை நேரடியாக அரசியலுக்கு இழுத்தால் தான் தவறு. அவரை மறைமுகமாக இழுத்தால் தவறில்லை. அவரை மறைமுகமாக தான், அரசியலுக்கு இழுக்கிறோம்' என குறிப்பிட்டார். இதற்கு, கூட்டத்தில் பெரும் கைதட்டல் கிடைத்தது.
மீண்டுமொரு நிர்பந்தம் ஏற்பட்டால்,
"மறைமுகமாக ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறோம்' என, கருணாநிதி பேசியது, உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிக்கு, நேரடியாக பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டாம். 1996ல் வெளியிட்டது போல், ஜெயலலிதா அரசுக்கு எதிராக, கருத்தை மட்டும் வெளியிட்டால் போதும் என்பது போல், கருணாநிதியின் பேச்சு உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ""ஜெயலலிதாவுக்கு எதிராக, 1996 சட்டசபை தேர்தலின் போது, கருத்து தெரிவிக்குமாறு, தேசிய தலைவர்கள் சிலர் என்னை கேட்டுக் கொண்டனர். அதனால், கருத்து தெரிவித்தேன். அதன் பிறகு, அரசியல் பற்றிய கருத்துக்களை, நான் தெரிவிக்கவில்லை' என, ரஜினி சமீபத்தில் தான் தெரிவித்தார்.
"நிர்பந்தங்களின் அடிப்படையில், கருத்து தெரிவித்தேன்' என்பதை உறுதி செய்யும் ரஜினி, மீண்டுமொரு நிர்பந்தம் ஏற்பட்டால், தன் நிலையை மாற்றிக் கொள்வார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
என்ன மரியாதை கிடைத்தது :
ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூறியதாவது:மீண்டும் தலைவரை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைய ஒரு திட்டம் @பாடப்படுகிறது. ஆனால், அவர் அதை புரிந்து கொள்வார். ஏற்கனவே, தி.மு.க., - த.மா.கா., கூட்டணிக்கு ஆதரவாக பாடுபட்ட எங்களுக்கு, பின்னாளில் என்ன மரியாதை கிடைத்தது என்று தலைவருக்கு நன்றாக தெரியும்.அவர் நேரடியாக அரசியலுக்கு வந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மறைமுகமாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர். லோக்சபா தேர்தலில், இவர்கள் எதிர்பார்க்கும்,"வாய்ஸ்' கிடைக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இத்தனை பேர் கருத்துகளை பதிந்து உள்ளீர்களே... ரஜினி என்ற மனிதரை பெரியதாக நினைக்காவிட்டால் இவளவு விமர்சனங்கள் வந்திருக்காது.......... உங்களுக்கு பேச இவ்வளவு உரிமை உள்ள போது அவருக்கும் அவருடைய கருத்தை சொல்ல உரிமை இருக்கிறதே ஆதலால் தனிப்பட்ட விமர்சனங்களை விடுத்தது உங்களுடைய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள்.... ஒரே மக்கள்தான் இரு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தார்கள்... புதியதாக ஓட்டளித்தவர்கள் குறைவான சதவீதம்தான். ஆகவே ரஜினி என்ற தனி மனிதர் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தரட்டும்... அவரவருக்கு பிடித்தவர்களுக்கு நீஎங்கல் ஓட்டு போடுங்கள். அவர் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறவில்லை... பிடித்தவர்கள் எல்லோரும்தான் பார்க்கிறோம்... இவளவு பேசும் நாம் நமக்காக போராடும் ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறோமா என்றால் இல்லை.... அப்புறம் ஏன் இத்தனை பேச்சு... நாடென்ன செய்தது உனக்கு என்பதை விடுத்தது நாம் என்ன செய்தோம் அதற்கு என்று யோசியுங்கள்... அப்போதான் உருப்படும் நம் நாடு.... வே.சரவணன்., நாமக்கல்.
திரு.ரஜினி அவர்களே, தாங்கள் அரசியலில் சேரனினைதால் தங்களின் முதல் நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் நல்லது செய்வதற்காகவே இருக்கவேண்டும். தங்களை வெய்து ஆதாயம் தேட நினைக்கும் நயவஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது. அவ்வாறு நீங்கள் மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுப்பதால் எந்த ஒரு நல்லாட்சியும் அமைந்துவிடபோவதில்லை. அந்த நல்லாட்சியை தங்களால் மட்டுமே தரமுடியும். மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து அவர்களை ஆட்சியில் அமர வைப்பதால் தங்களின் பட வெளியீடு அன்று தங்களை தைவமாக நினைக்கும் ரசிகர்களின் கதிதான் என்ன? அவர்கள் வெறும் பிறந்தநாள் கொண்டாடு வதற்கும் போஸ்டர் ஓட்டுவதற்கும் மட்டும் தானா? தங்களின் ரசிகர்களை பயன்படுத்தி சினிமா தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக சம்பதிதர்கள். அதே செயலைத்தான் இவர்களும் செய்ய நினைகிறார்கள். அதற்கு தங்கள் செய்யும் ஒரே நன்றிக்கடன் நீங்கள் அரசியலுக்கு வந்து அவர்களுக்கு நல்லது செய்வதுதான். அதைவிடுத்து மற்ற கட்சிகளுக்கு வாய்ஸ் கொடுத்து தங்களின் பெயரை கேடுதுகொள்ளாதீர்கள். தாங்கள் சொல்வது போல் அரசியலுக்கு வந்தால் உடன ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்று நினைப்பது சரி. ஆனால் தங்கள் சினிமா சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிக்கவந்த உடனே பெற்று விடவில்லை என்பதை நினைத்து கொள்ளவேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக தாங்கள் கஷ்டப்பட்டதை ஏன் மக்களுக்கு நல்லது செய்வதற்காக படகூடாது.
ரஜினி சினிமா வியாபாரி. கருணா அரசியல் வியாதி. ரஜினிக்கு அடுத்த படம் டார்கெட். கருணாவுக்கு அடுத்த தேர்தல் டார்கெட். உண்மையாகவே, தமிழ்நாட்டின்மேல் அக்கறை இருந்தால், கர்நாடகாவை தண்ணீர் விட சொல்லட்டும். மத்திய அரசை கரண்ட் கொடுக்க சொல்லட்டும். கருணாவையும் மத்திய அரசை நெருக்க சொல்லட்டும். அத விட்டுட்டு, வாய்ஸ் கொடுத்தால் அடுத்த படம் ஓடாது. வடிவேலு கதிதான். கருணாவை மக்களை தவிர, எந்த தனி மனிதனும் ஏமாற்ற முடியாது. அவருக்கு, அவரோட மக்கள் நலம் தான் பெரிது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.