"பொசுக்'கென முடிந்து போன பொதுக்குழு : அ.தி.மு.க., தொண்டர்கள் ஏமாற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அதிரடிகள் ஏதும் இல்லாமல் நடந்து முடிந்த பொதுக்குழுவால், அ.தி.மு.க., தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால், லோக்சபா தேர்தலில், உரிய பலன் கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்புகின்றனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை அ.தி.மு.க., நடத்தியது. இதன்மூலம், அக்கட்சியில் நிலவும் குளறுபடிகள் மற்றும் தொகுதிகளின் தேவைகள் அறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
கூட்டங்களை நடத்த நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், பன்னீர்செல்வம், விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர், ஜெயலலிதாவின் புகழ் பாடியதோடு, மற்றவர்களின் கருத்துக்களை கேட்கவும் இல்லை; தொகுதியின் தேவைகளையும் அறியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டத்தில், அதிரடி அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பொதுக்குழுவில் அடிமட்ட நிர்வாகிகளுக்கும், பேச வாய்ப்பு அளிக்கப்படும்; கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நினைத்தனர், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்.ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. தொகுதி வாரியாக, சென்று திரும்பிய அதே அமைச்சர்களை பொதுக்குழுவில் பேசவிட்டு, கூட்டத்தை முடித்து விட்டனர் என்று வருந்துகின்றனர் நிர்வாகிகள்.


"சப்பென' முடித்து விட்டனர் :

இது குறித்து, பொதுக்குழுவில் பங்‌கேற்ற, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான ஆட்சியில் நிலவும் குறைகள், ஆட்சியின் மூலம் கட்சி நிர்வாகிகளின் ஆட்டம், செயல்படாமல் உள்ள நிர்வாகிகளுக்கு கல்தா ஆகியவற்றை, பொதுக்குழுவில் எதிர்பார்த்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், "சப்பென' கூட்டத்தை முடித்து விட்டனர். "லோக்சபா தேர்தலில் கூட்டணியில்லை; தனித்துப் போட்டிக்கு தயாராகுங்கள்' என, அறிவித்த ஜெயலலிதா, அதற்கான முன்னோட்டப் பணிகளையும், பொதுக்குழுவில் அறிவித்திருந்தால், உற்சாகமாக இருந்திருக்கும். மாறாக, தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை எதிரொலிக்காமல், பொதுக்குழு முடிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொதுக்குழு, "சப்பென' முடிந்ததாலும், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்டவர்களை அதிரடியாக மாற்றி, கட்சியில் மீண்டும் ஒரு எழுச்சியை, ஜெ., ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்கள் மத்தியில் தொடர்கிறது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
06-ஜன-201312:40:59 IST Report Abuse
Yoga Kannan ராஜாதி ராஜா ...இராஜ பராக்கிரம தமிழக முதலமைச்சர் வருகிறார்...பராக் ..பராக்.... இப்படியாக ஓய்வெடுக்க இந்த அம்மையார் செல்லும்போது.ஒரு கூட்டம் ...அங்கே சென்ற பின்னே ஒரு கூட்டம் ...துதி பாடிகொண்டே இருக்க வேண்டும் ..இதை அம்மையார் ரசித்துகொண்டே இருக்க வேண்டும் .இது தான் இந்த அரசின் பெருமை...பெருமை.... வாழ்க கொட நாட்டு விஜயம்... தமிழா இனினும் நீ திருந்த வில்லை என்றால்.... அந்த சுனாமியே வந்தாலும் துதி பாடிகள்....இருண்ட தமிழகத்தை நிர்முலமாக்கி மக்கிவிடுவார்கள் ....
Rate this:
Share this comment
KMP - SIVAKASI ,இந்தியா
06-ஜன-201314:09:18 IST Report Abuse
KMPதமிழனை அழிக்க ஒரு தமிழனே போதும்.... எதற்கும் பயனற்ற கழக ஆட்சிகள் தமிழ் நாட்டின் வளத்தை திருடி அழித்துவிட்டது .... தமிழன் என்ன செய்ய போகிறான் மாத்தி மாத்தி ஓட்டு போட்டு கலங்கி பொய் இருட்டில் இருக்கிறான் ... ஆனால் கழக கம்முநாட்டிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது ??? இது தமிழனின் தலை எழுத்து ...
Rate this:
Share this comment
Cancel
Senthamilan - Sydney,ஆஸ்திரேலியா
06-ஜன-201311:38:46 IST Report Abuse
Senthamilan ஹிஹிஹி...இது ஆரம்பம்தான்.... காசுக்கும் பதவிக்கும் ஆசை கொண்டு திரியும் அல்லக்கைகள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஏமாளி தொண்டர்கள். அறியாமை உள்ள அடிமை அமைச்சர்கள்... ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யாமல் மக்களை சீரழிக்கும் தலைக்கனம் பிடித்த கொடியசக்தி... கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் மக்கள்... எனவேதான் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே கிலி பிடித்து விட்டது. போதாகுறைக்கு மக்கள் பிரச்னைக்காக திமுக நடத்து போராட்டம்... அதற்கு கிடைக்கும் மக்களின் பேராதரவு.... இவை எல்லாம் அதிமுகவில் பயத்தை உண்டாக்கி இருக்கும். கட்சியில் எல்லாமே தான்தான் என்ற அகம்பாவத்துடன் இருக்கும் ஜெயாவுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.....பெட்டி பெட்டியாக கொடுத்து காலில் விழுந்து கிடக்கும் அடிமைகளுக்கு மட்டும் அதிமுகவில் இடம்..மரியாதை...பதவி எல்லாம்....
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
06-ஜன-201310:38:40 IST Report Abuse
KMP ஆமாம் ... இது 40 களிலும் மண்ணை கவ்விய பிறகு பொது குழு கூடும்
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
06-ஜன-201310:26:58 IST Report Abuse
NavaMayam பொதுக்குழு மட்டுமா , ஆட்சியையும் சப்புன்னு , பொசுக்குன்னு தான் முடியும்....
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
06-ஜன-201310:08:30 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
06-ஜன-201308:36:15 IST Report Abuse
Guru எதையோ எதிர்பார்த்து இருக்கிறார்கள் ஒன்றுமில்லை என்றதும் விரக்கதி அடைத்துவிட்டர்களோ
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
06-ஜன-201307:38:49 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் வந்தோமா, அல்வா, போண்டா சாப்பிட்டோமா என்று இருந்தால்தான் அதுக்கு பெயர் பொதுக் குழு.........எல்லா கட்சிகளிலும், தலைமையின் சிந்தனையே பொதுக் குழுவில் திணிக்கப்படுகிறது.......சில கட்சிகளில் பத்து பேத்தை பேச விட்டு, தலைமை தனது சிந்தனையை திணிக்கும்......அண்ணா தி.மு.க.வில் இரண்டு, மூன்று பேர் மட்டுமே பேச அனுமதி........இது ஜெயாவின் ஸ்டைல்..........மொத்தத்தில், எல்லா கட்சிகளிலும் தலைமைதான் பொதுக்குழு, செயற்குழு, மோர்க்குழு எல்லாமே......
Rate this:
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
06-ஜன-201312:12:36 IST Report Abuse
Kuwait Tamilanஇன்னைக்குத்தான் ராதாவோட உண்மையான கருத்தாக இருந்தது....
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
06-ஜன-201306:28:39 IST Report Abuse
Aboobacker Siddeeq கடந்த கூட்டத்தின் தாக்கமும் அறிக்கையின் பலனாகவே தி.மு.க அணி தே.மு.தி.க. பக்கமும், சூப்பர் ஸ்டார் பக்கமும் வலை வீச ஆரம்பித்துள்ளது...இந்த பொது கூட்டத்திலும் ஏதாவது சொல்லி விட்டால் மீண்டும் வடிவேலு வரை தி.மு.க.கெஞ்ச வேண்டியது வரும்... கொஞ்ச நாளைக்கு பெரியவருக்கு ரெஸ்ட் கொடுப்போம்...பாவம் பெரியவரும் எவ்வளவவு தான் யோசிப்பார்...????
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
06-ஜன-201305:18:28 IST Report Abuse
Sekar Sekaran யார் சொன்னது "சப்" என்று முடிந்துபோனதென்று? வயிற்றில் புளி கரைய காத்திருந்த திமுகவுக்கு வேண்டுமானால் அப்பாடா எந்த நடவடிக்கையும் நம் மீது இல்லாமல் போனதே என்று இருப்பார்கள். "தனித்து" நிற்ப்போம் என்று அகில இந்திய அளவில் துணிச்சலாக சொன்னது யார்..? அம்மாவின் அறிவிப்பின் தாக்கம் திமுக தேமுதிக போன்ற கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்ப்படுதிவிட்டது.என்ன செய்யலாம் அடுத்து என்று உறக்கத்தை கலைத்த அறிவிப்பு அல்லவா? சிறப்பு நிருபர்..தூங்காத தலைமைகளின் கனாக்களை வேண்டுமானால் பேட்டி எடுத்து வெளிடலாம்..ஒற்றுமையாய் உள்ள காட்சிகளில் அதிமுகவே முன்னிலை எனும்போது..எதற்க்காக நடவடிக்கைகள்..பொதுக்குழு கூட்டித்தான் செய்யவேண்டும் என்கிற நிலையில் இல்லை. அம்மாதான் எல்லாமே கட்சியில்..தொண்டர்கள் எல்லாருமே அம்மாவின் பிள்ளைகள்..அம்மாவை தெய்வமாய் மதிப்போர்தானே பிள்ளைகளின் கடமை.."பிழைகளை" பிள்ளைகளாய் "பெற்றவர்கள்" வேண்டுமானால் கலங்கி நிற்கலாம்..காண்கின்றோம் அந்த கொடுமைகளை..ஆனால் அதிமுகவில் அம்மாவுக்கு உள்ள மரியாதை "தெய்வத்திற்கு" நிகரானவை என்பதை நாடறியும்.சரிதானே?
Rate this:
Share this comment
சத்தி - Bangalore,இந்தியா
06-ஜன-201317:33:55 IST Report Abuse
சத்திநாற்பதும் நமக்கே என்று நா... ந வரிசையில், கடைசியில் நாமத்தில் முடியகூடுமோ ? ...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-ஜன-201305:05:21 IST Report Abuse
Baskaran Kasimani பெயரிலே கூட "பொது" இருக்கும் பொழுது அவர்கள் உலகத்தை ஒரு டிகிரி திருப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தது தொண்டர்களின் தவறு. "பொது"க்குழு மற்றும் உயர்"மட்ட"க்குழு போன்றவை கழகங்களின் ஏமாற்று வேலைக்கு ஏற்ப்படுத்தப்பட்ட தொழில் நுணுக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்