லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், அழகிரி தெரிவித்த கருத்து, கூட்டணிக்கு குண்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., விடம் கூட்டணி வைத்துக்கொண்ட தே.மு.தி.க., உள்ளாட்சி தேர்தலில் கழற்றி விடப்பட்டது. கட்சி வளர்ச்சிக்காக, தொடர் செலவுகளை சந்தித்த நிலையில், ஆளுங்கட்சியினருடன் இணைந்து நாலு காசு பார்க்கலாம் என, தே.மு.தி.க.,வினர் கண்ட கனவு, பலிக்காமல் போனது.
கூட்டணி முறிவுக்கு பிறகு, அரசுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் எதிராக தே.மு.தி.க., நிர்வாகிகள், அரசியல் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம், தன் பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆட்சி குறித்து கடும் விமர்சனம் செய்தார்.முதல்வருக்கும், ஆட்சிக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பேசியதாகக் கூறி, அவர் மீது பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, தொடர்ந்து கோர்ட் படி ஏறி வருகிறார். இதனால், அ.தி.மு.க.,வின் மீது, தே.மு.தி.க.,வின் கோபம் அதிகரித்துள்ளது.
கலைஞர், "டிவி'யும், கேப்டன், "டிவி'யும் :
இந்த காயத்திற்கு மருந்து போடும் வகையில், லோக்சபா தேர்தலில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி உருவாகும் என்ற தகவல் கசிந்தது.இரண்டு கட்சி தலைமையும், அதற்கேற்ப மெல்ல காய்களை நகர்த்தி வந்ததுடன், ஒருவருக்கு ஆதரவாக, மற்றொருவர் கருத்து தெரிவித்தும் வந்தனர்.சமீபத்தில் தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜயகாந்த், ""தி.மு.க.,வுக்கு, "சப்போர்ட்' செய்ய வேண்டும் என்றால், பல வகையில், "சப்போர்ட்' செய்ய வேண்டி இருக்கும்,'' என்று கூறினார். விஜயகாந்தின் வெளிப்படையான பேச்சால், இரண்டு கட்சிகளிடையே கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டது. தொடர்ந்து, "அரசு கேபிள் ஒளிபரப்பில், கலைஞர், "டிவி'யும், கேப்டன், "டிவி'யும் காட்டப்படுவதில்லை' என, தே.மு.தி.க.,விற்கும் சேர்த்து வக்காலத்து வாங்கினார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. இதன் தொடர்ச்சியாக, லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு ஒன்பது சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கிடைக்கும் என, தொகுதி பங்கீடு அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.
மெல்ல மெல்ல மறந்து வருகிறது :
இந்த நிலையில், மதுரையில் பேட்டியளித்த அழகிரி, "நான்கு வழக்கை கூட சந்திக்க முடியாத விஜயகாந்தால், எப்படி முதல்வராக முடியும்' என்ற அதிரடி கேள்வி எழுப்பினார். கடந்த காலத்தில், திருமண மண்டபம் இடிப்பு, வருமான வரித்துறை சோதனை போன்ற காரணங்களால், தி.மு.க., தலைமை மீது கடும் கோபத்தில் உள்ள தே.மு.தி.க., தலைமை, அந்த கசப்புணர்வை மெல்ல மெல்ல மறந்து வருகிறது.
அ.தி.மு.க., தலைமை மீது கோபத்தில் உள்ள தே.மு.தி.க.,வை வளைத்து போட, ஸ்டாலின் தரப்பில் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிக்கு, அழகிரியின் கடுமையான விமர்சனம், வேட்டு வைப்பதாக அமைந்து விட்டது என்கின்றனர் தே.மு.தி.க.,வினர்.தே.மு.தி.க., பொங்கல் விழாவில், அழகிரியின் கருத்துக்கு, விஜயகாந்த் பதில் அளிப்பார் என்று கூறும் தே..மு.தி.க., பிரமுகர்கள், கூட்டணி வேண்டுமென்றால், இனி தி.மு.க., தான் இறங்கி வர வேண்டும் என, முரண்டு பிடிக்கத் துவங்கியுள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த இரு கழகங்களுக்கும் ஏதேனும் ஒரு நல்ல கட்சி ஆப்பு வைத்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்... முன்னேற்றம் என்பதை இந்த இரு கட்சிகளின் பெயர்களில் மட்டுமே காண முடிகின்றதே தவிர தமிழகத்தில் இல்லை.... எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... தமிழகத்தை திரு. மோடியிடம் ஒரு 5 வருடங்களுக்கு லீசுக்குக் கொடுத்து விட்டு "முன்னேற்றம்" என்றால் என்ன என்பதை இந்த இரு கட்சிகளின் கண்மூடித் தன்மான ஆதரவாளர்களுக்குப் புரிய வைக்கலாம்... நிலையான, உண்மையான நல்லாட்சிக்காக ஒவ்வொரு தமிழனும் ஏங்குகிறான்... தமிழா... உனது ஏக்கம் தீரும் பொன்னாள் வருமா... இப்படிக்கு, மனம் வெதும்பும் ஒரு உண்மைத் தமிழன்...
தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக மக்கள் மிகவும் வருதபடவேண்டி உள்ளது , இரண்டு கட்சிகளான admk & dmk இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களை மிகவும் கொடுமையான நிலைமைக்கு ஆலக்குகிரர்கள் , இந்த இரு கட்சிகளையும் ஒழிக்க வேண்டியது மக்களின் கனவாக இருந்தாலும் அனால் நனவாக முடியவில்லை, இதற்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டியது ஒருவருக்கு மட்டும் தான் அவர்தான் விஜயகாந்த் அவர் சில நேரங்களில் தெளிவாக பேச முடியதற்கு காரணம் உண்டு அவர் கடுமையாக மக்களுக்க உழைக்கிறார்.... சிந்திங்கள் மக்களே ...
\\\அம்மாவின் தயவில் தான் திரு விஜயகாந்த் அவர்கள் சட்டசபைக்கே சென்றார் என்பதை அவர் மறக்காமல் இருப்பது அவரின் வருங்காலத்திற்கு நல்லது\\\\ திரு ஜெய் அவர்களே, விஜயகாந்திற்கு இவ்வளவு சீட் கிடைத்தது அதிமுகவினால்தான் என்பது எவ்வளவு உண்மையோ., அதே போல் அதிமுக இவ்வளவு பிரம்மாண்ட வெற்றிபெற்றது, தேமுதிகவினால்தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை... தேமுதிக இல்லாவிட்டாலும் அதிமுக வெற்றி பெற்றிருக்கலாம்... ஆனால் அது., செல்வி ஜெயலலிதா" திமுக"வை கூறுவதுபோல் மைனாரிட்டி அரசாகத்தான் இருந்திருக்கும்...இனியொன்று., தனியாகவே அவர் அம்மாவின் தயவில்லாமலேயே ஏற்கனவே சட்டசபைக்கு சென்றுவிட்டார்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.