E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறுப்பு!
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

07 ஜன
2013
01:34
பதிவு செய்த நாள்
ஜன 06,2013 00:29

கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அரசின் பல்@வறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை முடிந்ததும் :



டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும், தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது. அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம். தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
09-ஜன-201317:32:26 IST Report Abuse
K.SURIYANARAYANAN வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 வருடம் சென்று விட்டது . பலன் இல்லை .இலவு காத்த கிளி போல உள்ளோம். நடராஜ் அவர்களுக்கு தெரியுமா ? இந்த அலுவலகம் தேவை இல்லை . மூடி விடலாம் .
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
06-ஜன-201311:26:48 IST Report Abuse
Guru படித்து வேலையில்லாதவர்களில் 30000 பேர் என்பது 1% கூட இல்லை...
Rate this:
2 members
0 members
24 members
Share this comment
Cancel
வெற்றிவேலன் - Panruti,இந்தியா
06-ஜன-201311:21:27 IST Report Abuse
வெற்றிவேலன் கடலூர் மாவட்டம் பத்திரகோட்டையில் கேள்வித்தாள் விற்றவர்களை கைது செய்யாதவரை நீங்கள் என்ன செய்தாலும் உங்களை நம்புவதற்கு இல்லை
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
guruprakash - Tirupur,இந்தியா
06-ஜன-201310:58:10 IST Report Abuse
guruprakash எழுத்து தேர்வில் பாஸ் ஆனாலும் நேர்முக தேர்வில் பாஸ் ஆனாலும் வேலை உறுதியாக லஞ்சம் ஏதேனும் கொடுக்க வேண்டுமா?
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-ஜன-201308:23:05 IST Report Abuse
kumaresan.m உங்கள் பணி மென் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் ,ஆனால் கேள்வி தாள் வெளியான சம்பவம் என்ன ஆயிற்றே தெரியவில்லை ??? ஒரு சிலரை சிறையில் அடைத்ததோடு சரி ...முடிவு என்ன ஆயிற்று ???
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
06-ஜன-201307:52:02 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் நடந்தால் மிக நன்றாக இருக்கும். எந்த ஒரு சிபாரிசு கடிதத்திற்கும் முன்னுரிமை கொடுக்காமல் அரசு பணிகளை மக்களுக்கு வழங்கினால் வரவேற்கும் முதல் மனிதர்களில் நானும் ஒருவன். என்னுடைய கனவு நனவாகுமா?............. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
06-ஜன-201306:53:41 IST Report Abuse
jayabalan அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலாக அன்றாடம் அறிக்கைகளுடன் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது ஒரு அரசு அதிகாரிக்கு முறைதானா? RRB UPSC SSC போன்றவைகள் பல காலமாக வேலைக்கு ஆள் எடுக்கும் பணியை சத்தமில்லாமல் ஏன் இருக்குமிடம் தெரியாமல் செய்து வருகின்றனவே முதலில் இந்த கவுன்சிலிங் ஒழிக்கப் படவேண்டிய ஒன்று இரண்டாவதாய் எதற்கும் கால வரம்பு நீட்டிப்பு வழங்கப் படுவது ஏனாம் இவ்வளவு சலுகை காட்டி தாஜா செய்து ஆள் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா? பணியமர்த்தப் படுபவர்களிடம் உரை நிகழ்த்துதல் எல்லாம் தேவையற்றவை
Rate this:
3 members
1 members
2 members
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
06-ஜன-201304:41:33 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை டி.என்.பி.எஸ்.சி தலைவர்தான் உண்மையான விருமாண்டி
Rate this:
0 members
1 members
13 members
Share this comment
Cancel
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
06-ஜன-201303:23:52 IST Report Abuse
suresh kanyakumari நல்ல வசியம் தான் ஆனால்,, 30,000 பேருக்கு வேலை 30 லட்சம் குடும்பங்களுக்கு ஏமாற்றம் தமிழ் நாட்டில் படித்து முடித்து எம்ப்லோய்மென்ட் ஆபீசில் பதிவு செய்து காத்து இருப்போர் கூறுவது, அடுத்த ஆட்சியில் சீனியாரிட்டி படி எங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்று கூறுவர் பலர். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு திட்டங்களை செயல் படுத்தினால் ஆட்சியை மாற விடாமல் காக்கலாம்.
Rate this:
10 members
1 members
3 members
Share this comment
M.a. Subramanian - Chennai,இந்தியா
06-ஜன-201309:00:03 IST Report Abuse
M.a. Subramanianபணம் வாகாமல் வேலை கொடுத்தல் நன்றக இருக்கும் , எபோது பிறகும் நல்ல காலம் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Vignesh Waran.s - Chennai (Madras),இந்தியா
06-ஜன-201309:47:18 IST Report Abuse
Vignesh Waran.sபடிச்சு வேலை வாங்க துப்பு இலடவர்கள் அரசியல் வாதிகளிடம் காசு குடுத்து seniority முறையில் நல்ல திறமை உள்ள younsters அஹ எமாதுவர்கள் .......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.