புதுடில்லி: டில்லியில், பாலியல் பலாத்காரத்தில், மருத்துவ மாணவி பலியான சம்பவம் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வால் நேற்று பரிசீலித்தார். குற்றம் சுமத்தப்பட்ட, ஐந்து பேரையும், நாளை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும், உத்தரவிட்டார். இதற்கிடையில், "மாணவியின் மரணத்திற்கு போலீசாரின் அலட்சியமே காரணம்' என, அவரின் சகோதரர் புகார் கூறியுள்ளார்.
தூக்கி வீசினர் :
டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கி, தூக்கி வீசினர். அவருடன் பயணித்த ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட, ஆறு பேரில், ஐந்து பேருக்கு எதிராக, இம்மாதம், 3ம் தேதி, டில்லி சாகெட் பகுதியில் உள்ள, பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், டில்லி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கைதானவர்களில், ஆறாவது நபர், தான் மைனர் என, தெரிவித்துள்ளதால், அவனின் வயதை உறுதி செய்ய எலும்பின் அடர்த்தியை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், வயது உறுதியான பின், சிறார் என்றால், சிறார் நீதிமன்றத்திலும், வயது வந்தவர் என்றால், இதே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இந்நிலையில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றப் பத்திரிகையை, நேற்று டில்லி கோர்ட் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, டில்லி போலீசார் மின்னணு முறையிலான, குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். இதன்பின், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேரையும், நாளை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தும்படி உத்தரவிட்ட பெருநகர மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வால், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும், 10ம் தேதி நடைபெறும் என, தெரிவித்தார்.
மரண வாக்குமூலம் :
முன்னதாக, அரசு கூடுதல் வக்கீல், ராஜிவ் மோகன் கூறியதாவது: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்துள்ள வாக்குமூலத்தை பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, போலீசார் சுமத்தியுள்ள குற்றங்கள் சரியானவை என்பதை உறுதி செய்கிறது. மாணவியின் வாக்குமூலத்தை, மரண வாக்குமூலமாக அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் மோகன் கூறினார்.
தாமதமான சிகிச்சை :
இதற்கிடையில், தன் தங்கைக்கு, மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே, அவருக்கு பல பிரச்னைகளை உருவாக்கி, மரணம் அடைய காரணம் என, மருத்துவ மாணவியின் சகோதரர் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள மாணவியின் சொந்த கிராமமான மெடவாரகலாவில், அவரின் சகோதரர் கூறியதாவது:
ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்ட என் தங்கை, அந்த வழியாக சென்ற பலரிடம் தனக்கு உதவும்படி கோரியுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. ரோந்து போலீசார் பார்த்து, போலீசுக்கு தகவல் கொடுத்த பின், அவர்கள், என் தங்கையை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கே இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியுள்ளது. அதற்குள் என் தங்கையின் உடலில் இருந்து, ஏராளமாக ரத்தம் வெளியேறியுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் என் தங்கைக்கு உதவியிருந்தால், உரிய நேரத்தில், அவளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்திருந்தால், அவள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அதனால், ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மன நிலையை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நடிகர் அமீர் கானின் ரசிகர் :
டில்லியில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் மாநாட்டில், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பது தொடர்பாக, ஒருமித்த கருத்து உருவாகவில்லை எனக் கூறப்படுவது வருத்தம் தருகிறது. ஆனாலும், என் தங்கை பாலியல் பலாத்கார வழக்கில், டில்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என, நம்புகிறேன். என் தங்கை பாலிவுட் நடிகர் அமீர் கானின் ரசிகர். அவரின் படம் என்றால் விரும்பிப் பார்ப்பார். எங்களுடன் சேர்ந்து அவர், கடைசியாக, "தலாஷ்' என்ற படத்தைப் பார்த்தார். இவ்வாறு மாணவியின் சகோதரர் கூறினார்.
"போர்த்தி கொள்ள துணி கொடுக்கவில்லை'
: மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் காயமடைந்த, அவரின் ஆண் நண்பர் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், அவர் கூறியுள்ளதாவது: ஓடும் பஸ்சிலிருந்து வெறிக் கும்பலால் வெளியே தூக்கி வீசப்பட்ட நாங்கள், ரத்த வெள்ளத்தில், அரை மயக்கில் ரோட்டில் விழுந்து கிடந்தோம். அப்போது, எங்களை சுற்றி, 15 பேர் நின்று கொண்டிருந்தனர். நிர்வாணமாக ரோட்டில் கிடந்த எங்களுக்கு, துணி எதையும் கொடுத்து, உடலில் போர்த்திக் கொள்ளும்படி கூட, யாரும் கூறவில்லை.
பிறகு, நின்றிருந்தவர்களில், சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்தனர். வந்தவர்களும், எங்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, எந்த போலீஸ் எல்லைக்குள் சம்பவம் நடந்தது என்பது தொடர்பாக, அரை மணி நேரத்திற்கு மேல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் வந்து, இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே, நாங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். பாதிக்கப்பட்ட மாணவியை, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றக் கூட, போலீசார் உதவவில்லை. நானேதான், அவளை தூக்கி வேனில் ஏற்றினேன்.
மருத்துவமனையில் கூட, எங்களின் உடலை மூடிக் கொள்ள யாரும் துண்டுத் துணி தரவில்லை. இவ்வாறு மாணவியின் ஆண் நண்பர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை டில்லி போலீசார் மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரின் ஆண் நண்பரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில், தங்கள் தரப்பில், எந்த விதமான தாமதமும் இல்லை என்றும், அவர்களை அழைத்துச் செல்வதற்கான வேன் வருவதில்தான் தாமதம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குடும்ப பின்னணியில் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமண தாமதம் மற்றும் திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள். மொத்தத்தில் பெண் சுகத்திற்காக அலைபவர்கள். இதற்கு முக்கிய காரணம் நாட்டில் பெண்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது, பெண்கள் அதிகம் படித்தவர்களாக சம்பாதிப்பவர்களாக மாறியிருப்பது. இதனால் குறைந்த வருமானம் உடைய, அதிகம் படிக்காத, அழகில்லாத ஆண்கள் திருமணத்திற்கு தகுதி அற்றவர்களாகிரர்கள். 40 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத நிறைய ஆண்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதற்கு ஒரே தீர்வு, நமது அரசு பாலியல் தொழிலை முறைபடுத்தி அனுமதிக்க வேண்டும். இதனால் குடும்ப பெண்களும் சிறுமிகளும் பாதிக்கபடுவது தடுக்கப்படும். சில சிறுவர்களும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்களே என கேட்கலாம். அதற்கு காரணம் சினிமா, மற்றும் தொலைகாட்சி ஆபாச பாடல்கள் வக்கிர ஆண்களை குறி வைத்து தயாரிக்கப்பட்டவை. பாலியல் தொழிலை அனுமதிக்கும் பொழுது இது போன்ற ஆபாச படங்களுக்கு வரவேற்பு குறையும் அதன் மூலம் சிறுவர்களின் தவறும் குறையும், கவனமும் சிதறாது. பாலியல் தொழிலை ஆதரிப்பதை மனித உரிமை கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். மீன்களுக்கு, வன விலங்குகளுக்கு இனப்பெருக்க காலம் அனுமதிக்கும் அரசு, மனிதனுக்கும் இது தேவை என்பதை உணர வேண்டும். மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழிலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும். குடும்ப பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளை காக்க வேண்டும்.
நம் நாட்டில் தான் பெண்ணை வணங்குவார்கள். அதே நேரத்தில் பெண்ணை கற்பழித்து தூக்கி எறிவார்கள். WHY THIS CONTRADICTION . பெண்கள் சிறிது சிறிதாக தங்களின் சுயமரியாதையை இழந்து கொண்டு வருகிறார்கள். திரைப்படங்களில் பெண்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள். போக பொருளை போல காண்பிக்கிறார்கள். இதற்கு எந்த பெண்கள் அமைப்பும் கொடி பிடிப்பதில்லை. யாரும் கண்டிப்பதில்லை. பெண்களை முக்கால் நிர்வாணமாக காண்பிக்கிறார்கள். அதை நடிப்பு என்கிறார்கள். கவர்ச்சி நடிகைகள் செய்ய வேண்டிய காரியங்களை கதாநாயகிகள் செய்கிறார்கள். நம் பக்கத்துக்கு வீட்டு பெண்ணை போல தோன்றும் ஒரு நடிகை இதை போல கவர்ச்சி காட்சிகளில் நடித்தால் சினிமாவுக்கு அடிமையான ஒருவன் அவன் பக்கத்துக்கு வீட்டு பெண்ணையும் அந்த கோணத்தில் தான் பார்ப்பான். இதனால் தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுகின்றன. திரைப்படங்களை விடுங்கள், பொதுவில் பெண்களை பார்த்தல் மரியாதை உணர்வு ஏற்படுகிறதா? பெண்கள் உடுத்தும் ஆடைகளும், அவர்கள் பேசும் தோரணையும் மரியாதையை ஏற்படுத்துவதில்லை. ஆகவே இப்படி யாராவது பாதிக்கப்பட்டு நடு ரோட்டில் கிடந்தால் கூட யாரும் உதவ முன் வர மாட்டார்கள். பெண்கள் தங்கள் சுயமரியாதையை நிலை நிறுத்த அவர்களுக்குள் ஒரு மிக பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் ஒன்றும் அவர்களுக்கு இழக்கு வந்து விட போவதில்லை. அவர்கள் சுதந்திரம் பறி போக போவதில்லை. மாறாக அவர்களுக்கு தான் அது பாதுகாப்பு. இதை உணர்ந்து இதை போன்ற தான் தோன்றி தனமாக இருக்கும் பெண்கள் இனியாவது தங்களை மாற்றி கொள்ள வேண்டும். பெண் சுதந்திரம் என்று பேசிபேசியே பெண்களை பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே வர வைத்து அந்த சுதந்திரத்தை வைத்து அவர்களின் ஆண் நண்பர்கள் தான் குளிர் காய்கிறார்கள். இதை இனியாவது பெண்கள் உணர வேண்டும். பெற்றோர்களுக்கு மதிப்பளியுங்கள், படிப்புக்கு மதிப்பளியுங்கள். இனியாவது இதை போல ஆண் நண்பர்களுடன் சுற்றி திரியாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை MISUSE செய்யாதீர்கள்.
காந்தியின் மரணத்திற்கு கலங்கிய தேசம் கண்ணீர் வடித்தது இந்த பெண்ணின் நிலைக்கு குமிறிய உலகம் கொதித்து எழுந்தது ஆடையில்லா மிருகங்கள்கூட கூட்டு சேர்ந்து யாரையும் கொல்வதில்லை ஆறறிவு மனிதபதர்கள் இரக்கமில்லாது செய்த ஈனக்கொலை உயிர்க்கு போராடும் மனிதர்களுக்கு உதவ யாருமில்லையாம் ஈரமில்லா நெஞ்சினர் வாழும் தலைநகர் என்ன நாடா ? இல்லை காடா ?
இதுக்கு நம்ம ஊர் போலீஸ் எவலோவோ தேவலாம் போல. முன்னாடி இந்த மாதிரி இருந்தாங்க..ஆனால் இப்ப முதல்ல 108 ஆம்புலன்சுக்கு போன் போட்டு வர வச்சு அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகுதான் விசாரணையை ஆரம்பிப்பார்கள். ஆனால் டுபாகூர் டெல்லி போலீஸ் பாதிக்க பட்டவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லாமல் முதலில் இந்த விபத்தை எந்த போலீஸ் விசாரிப்பது என்று சண்டை போட்டுள்ளார்கள். இந்த பொறுக்கிகள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும். காங்கிரஸ் ஆளும் டெல்லியின் லட்சணம் இதுதான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.