Advertisement
கேபிள் இணைப்பு இரட்டிப்பு : ரூ.240 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013,01:01 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 07,2013,01:36 IST

தமிழகம் முழுவதும், கேபிள் இணைப்பு கணக்கெடுப்பு மேற்கொண்டதில், இரண்டு மடங்கு இணைப்பு மறைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. வரும், 30ம் தேதிக்குள், கேபிள் இணைப்பு புள்ளி விவர கணக்கெடுப்புப் பணியை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு, 240 கோடி ரூபாய் வரை, கூடுதல் வருவாய் கிடைக்கும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில், அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், கேபிள் இணைப்பு சேவை, மக்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை நீங்கலாக மற்ற, 31 மாவட்டங்களில், அரசு கேபிள் இணைப்புகள், ஆபரேட்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் இணைப்புக்கு, 70 ரூபாய் வசூல் செய்து கொள்ளவும், ஒரு இணைப்புக்கு அரசுக்கு, 20 ரூபாய் மாதாந்திர கட்டணம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. மாநிலம் முழுவதும் கேபிள் இணைப்பு பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆபரேட்டர்கள், அரசுக்கு பல ஆண்டுகளாக பொய் கணக்கு காட்டி, மாதம் தோறும் பல கோடி ரூபாய், "சுருட்டி' வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், சராசரியாக, மூன்று முதல், நான்கு லட்சம் வரையிலான கேபிள் இணைப்பு உள்ளதாக, அரசுக்கு தவறான தகவல் காட்டி, மாநிலம் முழுவதும், ஒன்றரை கோடிக்கும் குறைவான இணைப்புகள் உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டது.

அரசின் இலவச, "டிவி' திட்டம் மூலம், வீடுகள் தோறும் தொலைக்காட்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெருவாரியான வீடுகளில் கேபிள் இணைப்பு இல்லை என்றே, அரசுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2012 அக்டோபர் மாதம் முதல், ரேஷன் கடை ஊழியர்கள், மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் கேபிள் இணைப்பு கணக்கெடுப்பு பணியை அரசு ஆரம்பித்தது. ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் பொருட்கள் வாங்க வருபவர்களிடம், அலுவலர்கள் விண்ணப்பங்களை அளித்து, கேபிள் இணைப்பு வீட்டில் உள்ளதா என, புள்ளி விவரம் சேகரித்து வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் ஜரூராக புள்ளி விவரம் சேகரித்து வரும் நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள் காட்டியதைக் காட்டிலும் கூடுதல் இணைப்பு உள்ளதாக கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி, 30ம் தேதிக்குள் கேபிள் இணைப்பு கணக்கெடுப்பு பணி முடியும் நிலையில், இணைப்பு விகிதம் இரட்டிப்பாக எகிறும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். மாநிலம் முழுவதும், இரண்டரை கோடி கேபிள் இணைப்புக்கு மேல் உள்ளதாக, புள்ளி விவரத்தில் தெரியவரும் நிலையில், ஒரு கோடி இணைப்பு மறைக்கப்பட்டதும் அம்பலமாகும். இதன் மூலம் கூடுதலாக, ஒரு கோடி இணைப்புக்கு மாதம், 20 ரூபாய் வீதம், 20 கோடி, அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ஆண்டுக்கு, 240 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் பெற வாய்ப்புள்ளது.
கடந்த மாதம், 17ம் தேதி, சென்னையில் கேபிள் கார்ப்பரேஷனின் ஆலோசனை கூட்டத்தில், முழு அளவிலான புள்ளி விவரங்களைச் சேகரித்து, அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், கேபிள் இணைப்பு குறித்து ஏமாற்றிய ஆபரேட்டர்களிடம், ஓராண்டுக்கான நிலுவை கட்டணத்தையும் வசூல் செய்ய வேண்டும் என, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.- நமது சிறப்பு நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (12)
jayabalan - chennai ,இந்தியா
06-ஜன-201315:04:07 IST Report Abuse
jayabalan சாதகமான தகவல்களை மட்டும் பார்ப்பதில் கில்லாடிகள் பலர் எப்படி எல்லாம் ஆட்டையை போட்டார்கள் என்று மக்கள் முன் இன்னும் வேகமாக கொண்டு செல்ல வேண்டும்.....என்கிறார் ஒருவர் முடிந்ததை பத்தி சிந்திப்பதை விட இனிமேல் தவறு நடக்க விடாமல் பார்ப்பது நல்லது என்கிறார் இன்னொருவர் எல்லாம் சரி இப்போ எப்படி 70 க்கு பதிலா 100 என கேட்காதே என்கிறார்களா? இப்போது சென்னையில் டிவி பார்ப்பதில் எவ்வளவு சோதனைகள் என்பது பற்றி எல்லோருமே கப் சிப் ஏனாம்?
Rate this:
0 members
0 members
111 members
Share this comment
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
06-ஜன-201311:49:08 IST Report Abuse
குடியானவன்-Ryot கேபிள் (தந்தி வடம்) நீங்கள் பிழைப்பதர்காக தமிழை கொலை செய்வது சரியில்லை....
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Nava Mayam - New Delhi,இந்தியா
06-ஜன-201310:30:00 IST Report Abuse
Nava Mayam இது வருவாய் அதிகரிப்புத்தான் , நிகர லாபம் அல்ல ... அரசு கேபிளால் எவ்வளவு நட்டம் என்று இன்னும் மூன்று வருசத்தில் தெரியும் ... ஆயிரம் கோடியை தாண்டும்...
Rate this:
3 members
0 members
170 members
Share this comment
gopi.u - tanjore,இந்தியா
06-ஜன-201310:12:23 IST Report Abuse
gopi.u 70 ருபாய் என்று பில் போட்டுவிட்டு 100 ருபாய் வாங்குகிறார்கள் எனது ஊர் மாத்தூர் தஞ்சை மாவட்டம் .
Rate this:
0 members
0 members
51 members
Share this comment
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
06-ஜன-201309:57:42 IST Report Abuse
நெற்றிக்கண் எந்த ஊரில் 70ரூ வசூலிக்கிறார்கள்? கடந்த மார்ச் மாதம் முதல் 100ரூ தான் கட்டாயபடுத்தி வாங்குகிறார்கள் இல்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என சொல்கிறார்கள். முதலமைச்சரின் தனி பிரிவுக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அப்படி பார்த்தால் அரசுக்கு இன்னும் பல கோடிகள் வருவாய் வரவேண்டும். இதனை முதல்வரின் பார்வைக்கு யார் கொண்டு செல்வது தெரியவில்லை...
Rate this:
0 members
0 members
57 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
06-ஜன-201309:57:18 IST Report Abuse
சுலைமான் கிடைக்கும் ஆனால் கிடைக்காது.
Rate this:
1 members
0 members
54 members
Share this comment
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
06-ஜன-201307:45:50 IST Report Abuse
T.R.Radhakrishnan கடந்த ஆட்சியில் எப்படி எல்லாம் ஆட்டையை போட்டார்கள் என்று மக்கள் முன் இன்னும் வேகமாக கொண்டு செல்ல வேண்டும்.....
Rate this:
32 members
0 members
11 members
Share this comment
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
06-ஜன-201307:27:47 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy நூறு ஆயிரம் கோடி அரசின் வருமான இழப்புகள் (முந்தைய ஆட்ச்சியாளர்கள் செய்த திருவிளையாடலால்) இப்போது எங்கள் மக்கள் முதல்வரின் ஆற்றலில் அரசின் கஜானாவை நிரப்பி மத்திய அரசு பாரா முகம் கொண்டாலும் மக்களுக்கு எப்போதும் எல்லாமும் பெற செய்கிறதே என்று என்னும்போது இவர் பிரதமர் ஆகி நாட்டின் கருவுலத்தை நிரப்பி நமது நாட்டை வளமான நாடாக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு
Rate this:
23 members
1 members
10 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
06-ஜன-201305:41:51 IST Report Abuse
K.Sugavanam இப்பவே எங்க கேபிள் ஆபரேடர் அடுத்த மாதம் முதல் 100 ரூபாய் கட்டணம் என்று சொல்லிவிட்டார்.அரசு அதிகாரிகள் கவனத்துக்கு.
Rate this:
2 members
22 members
5 members
Share this comment
suresh kanyakumari - Nagercoil,இந்தியா
06-ஜன-201303:37:00 IST Report Abuse
suresh kanyakumari முடிந்ததை பத்தி சிந்திப்பதை விட இனிமேல் தவறு நடக்க விடாமல் பார்ப்பது நல்லது
Rate this:
5 members
0 members
9 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
06-ஜன-201307:03:31 IST Report Abuse
ஆரூர் ரஙபழைய பாக்கிகளை வசூலித்தால் அரசு கேபிளை பல ஆண்டுகள் இலவசமாவே கொடுக்கலாம் . இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? வரி செலுத்தாமல் அரசுக்கு இத்தனை நாள் கடுக்காய் கொடுத்த கேடி பிரதர்ஸ் ஒன்றும் இந்த நடவடிக்கையால் ஏழைகளாகி விடமட்டார்கள் ...
Rate this:
17 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.