மும்பை: " எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
குடியரசு தினத்தில் தற்கொலை :
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.