DISTRICT NEWS | அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்| Dinamalar

அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டுமாணவர்கள் பயப்பட வேண்டாம்

மதுரை:""கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,'' என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார்.
கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: நல்ல வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் உருவாக்காத கல்வியால், எப்பயனும் இல்லை. கல்வியில் சுதந்திரமும், நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடும் இல்லாததால் தான், தரமான உயர்கல்வியைத் தரமுடிகிறது. இந்தியாவில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில், குறுகிய காலத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளோம். அதன் இரண்டாம் கட்ட நிலையில் உள்ளோம். நாக் கமிட்டி மூன்றாம் முறையாக ஆய்வு செய்துள்ளனர், என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசியதாவது:
கல்வி ஒன்று தான், மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாமல் இருக்கும் செல்வம். அறிவியலுக்கு இரு முகங்கள் உண்டு. ஏவுகணை, தொழில்நுட்பம் மூலம் புறவசதிகளை பெருக்குவது ஒரு முகம். சிந்தனைகளை உருவாக்குவது அகநுட்ப அறிவியல், இன்னொரு முகம்.நிறைய கற்கும் போது தான் தெளிவு வரும். புதிய ஆளுமை பிறக்கும். மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்க வேண்டும். அவற்றை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அனுமதிக்கிற புத்தகங்களை படிக்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பங்களைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. படிப்பதை ஈடுபாட்டுடன் செய்தால், அறிவியலும், தொழில்நுட்பமும் கையில் வரும், என்றார்.நிர்வாக செயல் அதிகாரி ராம்குமார் முன்னிலை வகித்தார். மேரிடைம் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ் துறைத் தலைவிசுப்பலட்சுமி, கல்லூரி முதல்வர் சண்முகம், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீராம் பங்கேற்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantha Sayanam Murthy - tirunelveli.,இந்தியா
06-ஜன-201309:41:08 IST Report Abuse
Anantha Sayanam Murthy அறிவியல் என்பதே சிந்தனைகளுக்கு பின் பிறக்கும் தெளிவு. அது மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்பதில் தான் இருக்கிறது.கேள்விகள் நாட்டுக்கும் நமக்கும் பயன் தருவதாக இருந்தாலே முன்னேற்றம் உண்டு ஆனால் இன்றைய மாணவர்கள் திரைப்பட பாணியில் செயல்படுவதால் நாட்டில் பற்றாக்குறை மட்டுமே வளர்கிறது நாட்டுநலன்கள் வளரவில்லை.இனியாவது நல்லொழுக்கத்தை பின்பற்றினாலே அவர்களுக்கும் நாட்டுக்கும் நற்பலன்கள் விளையும்.உணர்வார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.