முன்மொழிவேன் :
தொடர்ந்து, இது தொடர்பான கேள்விகள் எழுந்த நிலையில், "தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன்' என்று தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார் கருணாநிதி. இது குறித்து அவர் கூறியதாவது: தி.மு.க., ஒரு ஜனநாயக இயக்கம். குறிப்பாக, கட்சித் தேர்தலில், தலைவராகவோ, பொதுச் செயலர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால்,
கூட்டணியில் தே.மு.தி.க.,
நேற்றைய பேட்டியின் போபாது, "லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு, கருணாநிதி, ""தே.மு.தி.க.,விலே, "தி.மு.க.,' என்பதும் இருக்கிறதே,'' என, பதிலளித்தார். ஏற்கனவே, இரு கட்சிகளும் இணக்கம் காட்டி வரும் நிலையில், இந்த பதில் மூலம், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறப் போவது உறுதியாகியுள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரம். இதற்கிடை@ய, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டியில், ""தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்,'' என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டால்... கருணாநிதி மறைமுக எச்சரிக்கை : "தலைமையின் முடிவுக்கு எதிராக, கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தால், இனி கட்சி வேடிக்கை பார்க்காது; நடவடிக்கை எடுக்கும்' என, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அழகிரிக்கு மறைமுகமாக, கருணாநிதி எச்சரிக்கை விடுத்து பேசியதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தொகுதி வாரியாக, குறைந்தபட்சம், 2 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாவட்ட செயலர்கள்,
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.