Women bound by contract to do household chores, says RSS chief | கணவன் - மனைவி திருமண ஒப்பந்தம் சொல்வது என்ன?| Dinamalar

கணவன் - மனைவி திருமண ஒப்பந்தம் சொல்வது என்ன?

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 07, 2013 | கருத்துகள் (39)
Advertisement
""கணவனும், மனைவியும், திருமண ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது, "வீட்டின் தேவைகளை நீ பார்த்து கொண்டால், உனக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன்;

இந்தூர்: ""கணவனும், மனைவியும், திருமண ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது, "வீட்டின் தேவைகளை நீ பார்த்து கொண்டால், உனக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன்; உன்னையும் பாதுகாப்பேன்' என, மனைவியிடம், கணவன் உறுதி செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும் போது, மனைவியை, கணவன் கைவிடுகிறான்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கூறியுள்ளார்.

கடந்த வாரம், அசாமின், சில்சார் நகரில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற, அதன் தலைவர்,மோகன் பாகவத், பலரும் மறந்த, மறக்கடிக்கப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

"மேலை நாட்டு நாகரிகத்தில் மயங்கி, இந்து மத பண்பாடு, கலாசார பெருமைகளை புறம் தள்ளி, கண்டபடி வாழ்பவர்கள் மத்தியில் தான், கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் நடக்கின்றன. இந்தியா, முன், "பாரதமாக' இருந்த போது, இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் கிடையாது. மேலை நாகரிகத்தை பின்பற்றி, பாரதம், "இந்தியா' என, மாறிய பிறகு தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன.
நகர்புறங்களில் தான், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. கிராமப்புறங்களிலோ, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலோ அத்தகைய குற்றங்கள் அறவே நடப்பதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.இதை தவறாக புரிந்து கொண்ட சிலர், "நகர்புறங்களில் கற்பழிப்புகள் நடப்பதாகவும், கிராமப்புறங்களில் நடப்பதில்லை என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேசினார்' என, தவறான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அதை அரை குறையாக அறிந்த கம்யூனிஸ்டுகளும், சில பெண்கள் அமைப்பினரும், மோகன் பாகவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின், இந்தூர் நகரில் நேற்று முன்தினம் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில், மோகன் பாகவத் பேசியதாவது:
திருமணம் என்பது, கணவன், மனைவிக்கு இடையேயான ஒப்பந்தம். திருமணத்தின் போது, "நீ வீட்டை நன்றாக கவனித்து கொண்டால், உன் தேவைகளை நான் கவனித்து கொள்வேன்; உன்னையும் பாதுகாப்பேன்' என, கணவன் ஒப்பந்தம் செய்கிறான். அந்த ஒப்பந்தத்தை மனைவி மீறும் போது, வேறு வழியின்றி, மனைவியை கணவன் கைவிடுகிறான்.இவ்வாறு அவர் பேசினார்.


அதிர்ச்சி அளிக்கவில்லை :

இதில், கணவன் - மனைவி இடையேயான புரிதல் உணர்வு மற்றும் நல்லிணக்க ஒப்பந்தத்தை, மோகன் பாகவத் கூறியதை, தவறாக புரிந்து கொண்ட சிலர், வேண்டுமென்றே, அவதூறு பரப்பும் வகையில், நேற்று கருத்துகளை பரப்பினர். அதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர், பிருந்தா காரத் கூறுகையில், ""ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அவர்கள், இந்துகள், இந்துத்வா, மனு தர்மசாஸ்திரத்தின் படி, நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பியவர்கள். ஆகவே, அவர்களின் கொள்கையை, மோகன் பாகவத் பிரதிபலித்துள்ளார்,'' என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
08-ஜன-201321:54:15 IST Report Abuse
kamarud நாட்டில் இன்று பல பெண்கள் வீட்டின் தேவைகள் மட்டுமல்ல, கணவனின் தேவைகளையும்[மதுவுக்கு பணம் தருவது உட்பட] கவனித்து கொண்டு தானே இருக்கிறார்கள் . அப்பொழுதும் பெண்களை மேலும் கொடுமை செய்வதுதான் நடந்து கொண்டு இருக்கிறது ..........
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
07-ஜன-201315:28:02 IST Report Abuse
சத்தி இருவர் சேர்ந்து வாழ சமமான நீதி மட்டும் போதுமா , விட்டு கொடுத்தல் வேண்டாமா ?
Rate this:
Share this comment
Cancel
tamc tamc - madurai,இந்தியா
07-ஜன-201315:19:13 IST Report Abuse
tamc tamc இதற்கெல்லாம் கருத்து சொன்னால் நாம்பழைய கற்காலத்திற்கு பின்னோக்கி செல்வது தான் சால சிறந்தது.பெண்கள் சுதந்திரமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தது பெரியார் அவர்களின் காலத்திற்கு பின் தான் ஏன் சதி கூட சரி யென்று சொல்வது தானே.ஆர் எஸ்எஸ்சில் உடற்பயிற்சியை தவிர்த்து மற்றவை பிற்போக்கு தனமான கருத்துகள் தான் எனது அனுபவத்தில் கண்டதை சொல்லுகிறேன்.இவர்களின் கருத்துகளை பின்பற்றினால் இந்தியா முன்னேறாது என்பது உறுதி.விலங்கினங்கள் கூட ஆண் பெண் உறவு முறை நல்ல நிலையில் உள்ளது ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் பெண் என்பவள் மற்றொரு உயிர் என நினைக்க மறுப்பது ஏன்
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
07-ஜன-201313:31:05 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் தவறேதும் இருபதாக தெரியவில்லை.. இதை ஆமோதித்தால் இவர்கள் பெண் இனத்தை நசுக்க பார்கிறார்கள்.இன்னும் கற்காலத்தில் இருக்க சொல்கிறார்கள் என சொல்வார்கள்... மேற்க்கத்திய நாகரிகத்தில் திளைபவர்களுக்கு சொல்லி இருக்கிறார்.. சொன்னது R .S .S காரர் என்பதால் விவாத மேடை ஆகி விட்டது.. ஆனால் R .S .S எதை சொன்னாலும் எதிர்ப்பது என்பது வாடிக்கை ஆகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
07-ஜன-201312:55:37 IST Report Abuse
tamilaa thamila ஆணாதிக்க கருத்து. பெண்ணுக்கு சம உரிமை தேவை. ஆண் மட்டும் விவாக ரத்து உரிமை உடையவனா? ஏன் பெண்ணுக்கு அந்த உரிமை கிடையாது? ஏன் அவள் மட்டும் சதி ஏறவேண்டும். விளக்குவாரா?
Rate this:
Share this comment
Er. S. ARJUNAN - Doha,கத்தார்
07-ஜன-201315:24:12 IST Report Abuse
Er. S. ARJUNANசட்டம் தெரியாமல் பேச வேண்டாம், பெண்ணுக்கும் விவாகரத்து உரிமை உண்டு என்பது தெரியாதா? மேலும் சதி நம் நாட்டில் இருந்து ஒழிந்து போன ஓன்று என்பதும் தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
07-ஜன-201312:37:57 IST Report Abuse
arabuthamilan இந்து மத பண்பாடு என்று சொல்லாதீர். இறைவன் வகுத்த கட்டளை. புனித வேதாகமத்தில் ஒரு ஆதாமுக்கு ஒரு ஏவாளைத்தான் தேவன் படைத்தார். பின் வந்தவர்கள் தங்களுக்கு வசதியாக மறுமனையாட்டிகளையும், வைப்பாட்டிகளையும் தனக்கு ஆங்காங்கே வைத்துக்கொண்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
07-ஜன-201312:33:45 IST Report Abuse
TamilArasan இவர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை, நாம் நமது கலாசாரம், பண்பாடு மறந்ததனால் வந்த வினை...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
07-ஜன-201312:19:55 IST Report Abuse
Mohamed Nawaz இவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வுறு படைப்பிற்கும் தனித்தனி தன்மைகள் உள்ளன. பெண் என்பவள் ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவள். சிறு வயதில் பெற்றோர்(தந்தை) திருமணம் முடிந்தால் கணவன், பின்னர் மகனால் பாதுகாக்கப்பட வேண்டும். தாய் குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடம் கணவனுக்கு மன சந்தோசம், ஆறுதல், அளிக்கவேண்டும். இதைத்தான் அவரும் சொல்கிறார், பெண்களை போகப் பொருளாக பார்ப்பவர்கள் சமஉரிமை என்ற மாயையில் உள்ளனர். எல்லாம் மேலை நாட்டு மோகத்தினால் வந்த வினைகள்.
Rate this:
Share this comment
Cancel
geejee - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-201311:09:27 IST Report Abuse
geejee சரியான விசயமே, பெண்களிடம் எப்போது பணம் என்ற பெரிய பேய் வந்ததோ அப்போதே தலைகணம், கர்வம், ஆணவம், எல்லாம் வந்து விட்டது. அதன் மூலம் எல்லாம் வந்துவிட்டது. தேவையை விட எப்போது பணம் அதிகமாகிறதோ அப்போதே மற்ற விசயங்களுக்கு மனம் செல்கிறது
Rate this:
Share this comment
Cancel
yesubalan - coimbatore,இந்தியா
07-ஜன-201310:45:09 IST Report Abuse
yesubalan இன்றைய கால சூழலில் ,இவருடைய கருத்து ,பட்டி மன்றத்திற்கு உதவும் ,வாழ்க்கைக்கு உதவாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை