சென்னை: ""விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளிட்டால், திருடி விற்போம்; மின் இணைப்பைத் துண்டிப்போம் என, பலரும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, நடிகர் கமல்ஹாசன், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். "விஸ்வரூபம்' படத்தை, இம்மாதம் 10ம் தேதி, டி.டி.எச்.,சில் வெளியிடப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
"கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும்; இதைக் கைவிட வேண்டும்' எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், நேற்று மதியம் டி.ஜி.பி., அலுவலகத்திற்குச் சென்று புகார் ஒன்றைக் கொடுத்தார். பின், வெளியே வந்த கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறியதாவது: சினிமா துறையில், வித்தியாசமான புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறோம். நேர்மையான முறையில் தொழில் செய்தால், மென்மேலும் மேம்படும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதன்படியே, இம்மாதம் 10ம் தேதி, டி.டி.எச்., மூலம், "விஸ்வரூபம்' படம் வெளியிடப்பட உள்ளது. அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடப்படும்.
டி.டி.எச்.,சில் வெளியிட்டால், அவற்றை திருடி விற்போம் எனவும், மின் இணைப்பைத் துண்டிப்போம் எனவும் பலர் எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு சார்ந்த விஷயம் என்பதால், கூடுதல் டி.ஜி.பி.,யிடம் புகார் செய்துள்ளேன். மிரட்டல் விடுப்பவர்கள் யார், யார் என்பது குறித்து, புகாரில் தெரிவித்துள்ளேன். இதை வெளிப்படையாக கூற முடியாது.அடுத்த கட்டமாக, தமிழக அரசின் தலைமைச் செயலரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். எந்த தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி, 10ம் தேதியன்று, "விஸ்வரூபம்' படம், டி.டி.எச்., மூலம் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தியேட்டர் உரிமையாளர்கள் "பல்டி?'
"விஸ்வரூபம் படத்தை திரையிட ஒப்புக்கொண்டுள்ள தி@யட்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களும் படத்தை திரையிடு@வாம்' என, சங்க நிர்வாகிகளுக்கு, மற்ற தி@யட்டர் உரிமையாளர்கள் நெருக்கடி அளித்துள்ளனர். கமல்ஹாசன், இயக்கி, நடித்துள்ள, "விஸ்வரூபம்' படம், வரும், 11ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன், 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, டி.டி.எச்., முறையில், "டிவி'யில் வெளியாகிறது. இதற்கு, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்களின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் இச்சங்கங்களின் கூட்டமைப்புகள் மூலம், தொழில் ஒத்துழைப்பு கொடுக்கப்படாது என, கூட்டாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கமல் தரப்பினர், தியேட்டர்காரர்களை தனித்தனியே அணுகி, படத்தை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் என, முக்கிய நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில், படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தி@யட்டர் உரிமையாளர், வினியோகஸ்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "கட்டுப்பாட்டை மீறி, படம் வெளியிடும் தியேட்டர்களின் மீது, நடவடிக்கை என்ன' என்பதை, உடனடியாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன.
"குறிப்பிட்ட தியேட்டர்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது தியேட்டர்களிலும், படம் வெளியிடுவோம்' என, தியேட்டர் உரிமையாளர்கள் நிர்பந்தம் கொடுத்துள்ளனர். இதனால், கமல் தரப்பு மகிழ்ச்சியாகி உள்ளது. இந்த மோதல் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
படம் எடுப்பவனுக்கு அதை வியாபாரம் செய்ய முழு உரிமை உண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும். உங்களின் தியேட்டர் வருமானம் பாதிக்கும் என்றால், அதற்கு ஏற்ற விலை கொடுத்து வாங்குங்கள் அல்லது வாங்காதீர்கள். அது உங்கள் உரிமை. ஒரு படைப்பாளியை இப்படித்தான் நீ வியாபாரம் செய்ய வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது. முதலில் நீங்கள் தியேட்டரில் விலையை குறையுங்கள், கூட்டம் தானாக வரும். திருட்டு வி.சி.டி.தொல்லை ஒழியும். சாமானியன் குடும்பத்துடன் படம் பார்க்க வரவேண்டுமானால் குறைந்தது 500 ரூபாயாவது செலவு செய்ய வேண்டிஉள்ளது. திருட்டு வி.சி.டி. எல்லாம் 100 ரூபாயில் முடிந்து விடும்.
டிரைலர்களை பார்க்கும்போது உலகத் தரத்தில் எடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் பெரிய திரையில் பார்க்கும்போதுதான் நிறைவாக இருக்கும்..... தற்போது DTH ல் வெளியிடுவது ஒரு விளம்பரம் போலத்தான்.... சின்னத் திரையில் இதை பார்க்கும் சினிமா ரசிகர்கள் அதன் முழு வீச்சை காண திரையரங்கிற்கு கண்டிப்பாக வருவார்கள் ..... கமலின் இந்த வியாபார உத்தியை வெறும் பிளாக்கில் டிக்கெட் விற்று லாபம் பார்க்கும் திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.....
95 கோடியில் எடுத்த படத்தை 190 கோடிக்கு விற்க கமல் ஆசைபடுவது நியாயம் என்றால், 95 கோடி படத்தை 190 கோடிக்கு வாங்கி அதை 380 கோடிக்கு லாபம் பார்க்க நினைக்கும் தியேட்டர் உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர் செய்வதும் நியாயமே. வெறும் டிக்கட் வருமானம் போதாது. கூடவே வாகன டிக்கெட் மற்றும் கான்டீன் வருமானம் வேண்டும். நியாயவான் கமல் DTH ல் வெளியிடும்போது எதற்கு தியேட்டேர்ல் வெளியிடனும். DTH ல் வெளியிட்டால் திருட்டு தனமாக டவுன்லோட் செய்து யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். மேலும் DTH ல் வெளியிடுவது ஒருவர் ரூபாய் 1000/ - செலுத்தி ஒரு அபார்த்மெண்டே பார்க்க முடியும். ஏற்கனவே THIRUTTU DVD பிரச்சனை விஸ்வருபம் எடுத்து உள்ளது....
இங்கு கமல் அவர்களை திட்டும் நண்பர்களே ,முதலில் கவனம் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் ஒருவன் ஆயிரம் ருபாய் கொடுத்து படம் பார்க்க ஆசை படுகிறான் என்றால் அதுவே எவ்வளவு பெரிய தப்பு இங்கு பாதி பேர் உன்ன உணவில்லாமல் குடிக்க சரியான குடிதண்ணீர் இல்லாமல் இருக்கும் போது இப்படி செலவு செய்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள் ,கமல் மட்டும் அல்ல அணைத்து திரையுலகமும் வியாபாரிகள் தான் ,இதே திரைஅரங்கு உரிமையாளர்கள் ஏதாவது பெரிய நடிகரின் படம் வந்தால் அரசு அனுமதித்த டிக்கெட் விலை தான் விட்கிரார்களா,இல்லையே 500 ஆயிரம் என்று வியாபாரம் செய்து அதில் வரி ஏய்ப்பு நடத்துகிறார்கள் ,கமல் பார்த்தார் யாரோ சம்பாதிப்பதை விட நாமே சம்பாதித்து விடலாம் என்று செய்து விட்டார் இதற்க்கு குய்யோ முயூ என்று ஏன் குதிக்க வேண்டும் படம் வெளியிட முடியாது என்று அடுத்த வேலையே பார்க்க வேண்டியது தானே ஏன் என்றால் கமலுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது படம் திரைஅரங்கில் வெளியிட முஇடிஅவில்லை என்றால் இவர்கள் கொள்ளை அடிக்க முடியாது ,இவ்வளவு வாய் கிழிய பேசும் திரைஅரங்கு உரிமையாளார்கள் சின்ன budget திரைபடத்தை குறைந்த வாடகையில் வெளியிட்டு இருந்தால் எவ்வளவு தயாரிப்பாளர்கள் தப்பி இருப்பார்கள் அனைவருமே சுயநலவாதிகள் தாங்கள் சம்பாதிக்க வேண்டும்,மக்கள் முட்டாள்கள் மாதிரி செலவு செய்ய தயாராக இருக்கும் போது அதை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைகிறார்கள் ,அதனால் கமலும் சரி மற்றவர்களும் சரி அனைவருமே வியாபாரிகள் தான் அதனால் விருப்பம் உள்ளவர்கள் பார்ப்பார்கள்
ஏன் அவர் டி.டி.எச்., முறையில் முதலில் வெளியிடுகிறார் என்றால், படத்தின் முதலிடு 90 கோடி, ஆனால் விநியோகஸ்தர்கள் அதை 50 கோடிக்கு கேட்கிறார்கள். அதனால் தான் டி.டி.எச் இல் வெளியிட்டால் தான் போட்ட முதலிடு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பொது நஷ்டம் வராமல் தான் செய்வார்கள். இதற்கு ஏன் நீங்கள் குதிகிரிர்கள் ஜெய்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.