Advertisement
"ஷாக்' அடிக்கும் "ரோபோ' செருப்பு : பெண்கள் பாதுகாப்புக்கு வந்தது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2013,01:19 IST

தானே: மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண்களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், வன்முறையாளர்களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.


டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், "ரோபோ' செருப்பை தயாரித்துள்ளனர். சாதாரணமாக பெண்கள் அணியும் செருப்பில், சிறிய எலக்ட்ரானிக் சாதனம் பொருத்தப்படும். அது, காலுக்கோ, நடக்கவோ எந்த சிரமமும் கொடுக்காது.




பெண்களுக்கு ஏதாவது சிக்கல் எழும் போது, போலீஸ் மற்றும் உறவினர்களை உஷார்படுத்த வேண்டும் என்றால், செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டினால் போதும். அந்த எலக்ட்ரானிக் கருவியில் இருந்து புறப்படும் சிக்னல்கள், மொபைல் போனை, "ஆன்' செய்து, போலீஸ் மற்றும் போன் உரிமையாளர்களின் உறவினர்களை உஷார்படுத்த, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பி விடும். இந்த அருமையான, எலக்ட்ரானிக் செருப்பை உருவாக்கியது, ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியர் சிலர். அவர்களுக்கு, பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள் உதவியுள்ளனர். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில், இந்த ரோபோ செருப்பை தயாரித்துள்ள மாணவியர், அதன் செயல்பாட்டையும் செய்து காட்டினர்.


"தரையில் இரண்டு முறை தொடர்ந்து தட்டியதும், எஸ்.எம்.எஸ்., சென்றதுடன், அந்த செருப்பை அணிந்தபடி, எதிராளியை மிதித்தால், அந்த நபருக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' ஏற்படும். சிறிது நேரத்திற்கு எதுவும் செய்ய முடியாமல், அந்த நபர் திணறுவார்; அந்த நேரத்தில் தப்பித்து கொள்ளலாம்' என, அந்த மாணவ, மாணவியர் விளக்கினர்.


அதிகபட்சம், 2,000 ரூபாய் தான்;



"ரோபோ' செருப்பின் விலை, அதிகபட்சம், 2,000 ரூபாய் தான். வெளியே செல்லும் போது, எந்த பொருளையும் மறந்து விடுவது உண்டு; ஆனால், யாரும் செருப்பு போட மறப்பதில்லை என்பதால், இந்த எலக்ட்ரானிக் கருவியை, செருப்பில் தயாரித்ததாக, மாணவர்கள் கூறினர்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (14)
R.Saminathan - mumbai,இந்தியா
09-ஜன-201310:25:39 IST Report Abuse
R.Saminathan இந்த கண்டு பிடிப்புக்கு மாணவ மாணவிகளுக்கு எனது பாராட்டுக்கள்,,.இந்த செருப்பு நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வர கொஞ்சம் கடினம்தான்,,,.,சரியான முறையில் பெண்கள் பயன் படுத்த வேண்டும்,..,எனது தாழ்மையான வேண்டுகொள்ளாகும்.. ,,.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Solvathellam Unmai - Chennai,இந்தியா
08-ஜன-201316:49:34 IST Report Abuse
Solvathellam Unmai இந்த செருப்பு ரொம்ப ஆபத்தானது இதை உடனே தடை செய்ய வேண்டும். இதற்கு ஆண் பெண் வித்தியாசம் தெரியாது
Rate this:
5 members
0 members
6 members
Share this comment
Thanigaivelan Venkataraman - Chennai,இந்தியா
08-ஜன-201302:39:44 IST Report Abuse
Thanigaivelan Venkataraman very good congratz... there should be some mis-use option available in each tool/action. But proper-use/regulation is most important. Entire World like that you can USE/MIS-USE, choice is yours.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
mukundan - chennai,இந்தியா
07-ஜன-201316:15:19 IST Report Abuse
mukundan வெளிநாட்டு பொருட்களை வாங்கும் நாம் / நமது அரசு இது போன்ற இந்தியர்களின் கண்டுபிடிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை மேலும் உற்சாக படுத்த வேண்டும். இது போன்ற சிறுவர்களால் தான் அற்புதமான இந்தியாவை உருவாக முடியும்.
Rate this:
2 members
1 members
33 members
Share this comment
Kubera Mathi - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-201313:59:46 IST Report Abuse
Kubera Mathi Very good ......keep up....
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
07-ஜன-201313:40:46 IST Report Abuse
LAX அருமையான கண்டுபிடிப்பு. சூப்பர். ஆனால், யாரையாவது (அருகில் நிற்பவரை) தெரியாமல் மிதித்துவிட்டால்?
Rate this:
0 members
4 members
28 members
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
07-ஜன-201312:54:42 IST Report Abuse
Prabu.KTK நல்ல கண்டு பிடிப்பு. வாழ்த்துக்கள்
Rate this:
0 members
1 members
16 members
Share this comment
bhavani boopathy - chennai 70,இந்தியா
07-ஜன-201312:50:03 IST Report Abuse
bhavani boopathy பெண்களுக்கு சிக்கல் வரும்போது மட்டும் உதவனும். கோவம் வரும் போது தந்தை மகன் என உபயோகப்படுதிட்டங்கன்னா ..............தேவை இல்லாத உபத்திரவம்தான் குடும்பத்தில் ......
Rate this:
12 members
1 members
6 members
Share this comment
Gayathri Sridhar - Pudukkottai,இந்தியா
07-ஜன-201310:44:39 IST Report Abuse
Gayathri Sridhar very nice Congratz.....
Rate this:
0 members
1 members
8 members
Share this comment
Saravanan Angappan - Bengaluru,இந்தியா
07-ஜன-201309:48:14 IST Report Abuse
Saravanan Angappan நல்ல கண்டுபிடிப்பு. பாராட்டுகள்.
Rate this:
0 members
0 members
19 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.