Parents protest ; Schools, colleges, opening at 7:30 am | பள்ளி, கல்லூரிகள் காலை 7:30 மணிக்கு திறப்பு ; சாத்தியமா ? பெற்றோர் கடும் எதிர்ப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (240)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள்,

மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.

மாணவர்கள் பாதிப்பர்:
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.
இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement

கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (240)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Azeez - Dammam,சவுதி அரேபியா
09-ஜன-201302:15:15 IST Report Abuse
A.Azeez எஸ் திஸ் ஸ்கீம் மஸ்ட் பி இம்ப்லெமெண்டெட்
Rate this:
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
09-ஜன-201302:10:12 IST Report Abuse
Varatharajan துக்ளக் ஐடியாதான் நாட்டில் இவங்க வந்தா ஒரு திட்டம், அவங்க வந்தா ஒரு திட்டம் இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஐடியா தான் ஏன் என்றால் மக்கள் எப்படி சொன்னாலும் கேக்கிறார்கள் மக்கள் மிக இனிமையானவர்கள் யார் எதை சொன்னாலும் கேக்கிறார்கள், இவர்களை, இவர்களின் மனதை ஈசியாக மாற்றிவிடலாம் என்ற தெகிரியம் இருப்பதால் தான் மாற்றம், மாற்றங்கள் வருகிறது. இந்த திட்டம் பள்ளி, கல்லூரி முடித்து மாலையில் அதிக நேரம் இருப்பதால் விளையாட்டு, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் போன்ற கேளிக்கைகளில் மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் சென்று தங்கள் படிப்பு பதிக்கப் படும் இதற்கு மக்களிடம் ஒட்டு எடுப்பு அந்த அந்த பள்ளி, கல்லூரிகளின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் கைப்பட எழுதிய கையெழுத்து பிரகாரம் அந்த அந்த பள்ளிகளுக்கு, பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கு, இல்லை தலைமை ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் மூலம் கடிதம் எழுத சொல்லி வகுப்பு வாரியாக அங்கெ, ஆங்கே பிரித்து எண்ணிக்கை செய்து இதில் தீர்மானம் எடுக்கலாம் இதில் யாரும் கள்ள ஒட்டு போட மாட்டார்கள் வெள்ளை தாளில் அவர்களே கவரினுள் வைத்து எழுதிக் கொடுத்து, ஒட்டிக் கொடுத்து அனுப்பி இதில் எந்த நேரத்துக்கு துவங்கலாம் என்று கருத்துக் கேக்கலாம் இது தான் சரியான முடிவு ஆக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
09-ஜன-201301:09:38 IST Report Abuse
Sundeli Siththar அதிகாலை பள்ளி என்பது சரியில்ல. குழந்தைகள் குளிர்காலத்தில் படிக்க செல்லுவது கடினமே. அதிக அளவில் பேருந்துகளை இயக்குவது, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்றவற்றை போக்குவரத்துத் துறை பரிசீலிப்பதை விட்டுவிட்டு பள்ளி கல்வி துறை என்னசெய்யவேண்டும் என்பதை கூரவேண்டாமே.
Rate this:
Share this comment
Cancel
sengottaian - Wakrah,கத்தார்
09-ஜன-201300:53:07 IST Report Abuse
sengottaian கத்தாரிலும் பள்ளிகள் காலை 7.00 மணிக்கே ஆரம்பித்து விடுகின்றன.டெல்லியிலும் பெங்களூரிலும் நடைமுறையில் உள்ளபோது,நம்ம ஊரிலும் சாத்தியமே. மிகவும் முடியாதவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கலாம்.சிறு குழந்தைகளை அருகில் உள்ள பள்ளியில் சேர்ப்பதுவே சாலச் சிறந்தது .
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
08-ஜன-201319:30:37 IST Report Abuse
Sahayam அருமையான யோசனை. உடனே அமல் படுத்த வேண்ட்டும். அரசு மதிய உணவு கொடுப்பது போல் கலை உணவும் கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
08-ஜன-201319:10:15 IST Report Abuse
பொன்மலை ராஜா படிக்கட்டுப் பயணத்திற்கு போக்குவரத்துத் துறையிடம் அறிக்கை கேட்டால், தங்கள் துறை சம்பந்தப்பட்ட வகையில் என்னென்ன செய்திட முடியும் என்பதையும், அதற்கான திட்டங்களையும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ள இடையூறுகளையும், தேவைகளையும் பட்டியலிட்டிருக்க வேண்டும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், இருக்கும் பேருந்துகளின் நேரங்களை சிற்சில மாறுதல்களுக்குட்படுத்தவும், பேருந்துகளில் கதவுகளைப் பொருத்தவும், கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அனைத்துப் பேருந்துகளும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதனை விடுத்து காவல் துறைக்கும், கல்வித் துறைக்கும் தீர்வு காணும் பொறுப்பைத் திணிப்பது போக்குவரத்துத் துரையின் திறமையின்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
iqbal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201319:07:29 IST Report Abuse
iqbal இந்த திட்டம் நல்லது. பெற்றோர்கள் நாங்கள் வரவேற்கிறோம். அனைவரும் ஆதரவு தாரீர்.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
08-ஜன-201319:02:42 IST Report Abuse
vidhuran மேலை நாடுகளில் மாலை 7 - 7:30 மணிக்கெல்லாம் தூங்க சென்று விடுகிறார்கள். எந்தக் குடும்பமும் 8:30 மணிக்கு மேல் விழித்திருந்து வேஸ்டாக TV சீரியல் பார்த்துக் கேட்டுப் போகாமல், சீக்கிரமே அயர்ந்து தூங்கி அதிகாலையில் எழுந்து 7 மணிக்கெல்லாம் பிள்ளைகளை பள்ளி அனுப்பி விடுகிறார்கள். காலையில் படிப்பது நல்லது. இதில் உள்ள பெரிய பிரச்சினை, மேலை நாடுகளில் 7 மணிக்கெல்லாம் கம்பனிகளையும், ஆபிஸ்களையும் திறந்து விடுவார்கள், ஆகையால் சரியாக 8 மணிநேரம் வேலை பார்த்து விட்டு 3 - 4 மணிகெல்லாம் பெற்றோர் வீடு திரும்பி வந்து பிள்ளைகளைக் கவனித்து கொள்வார்கள். ஆபிஸ் நேரத்தையும் மாற்றியமைத்தால், இது ஒரு அருமையான திட்டம்.
Rate this:
Share this comment
Cancel
SathyaSridhar - Johannesburg,தென் ஆப்ரிக்கா
08-ஜன-201318:27:36 IST Report Abuse
SathyaSridhar பிரைவேட் ஸ்கூல் எல்லாம் எப்டி பஸ் டைம் க்கு அந்த அந்த ஸ்டாப்பிங் கு கரெக்டா அஹ வருதொஎ அதே மாதிரி எல்லா அரசு பள்ளி களுக்கும் பஸ் விட வேண்டும். அதுக்கு அரசு ஸ்கூல் ல ஒரு சர்வே எடுக்கணும் ஏரியா வகைல எடுத்து அதுக்கு தகுந்தட் போல பஸ் கல் விட ஈஸி அஹ இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
08-ஜன-201317:25:06 IST Report Abuse
K.Balasubramanian தற்போது மின் வெட்டால் பாதிப்பு. எனவே அடுத்த கல்வி ஆண்டில் மின் வசதி சரியான பின் நடைமுறை படுத்தலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.