கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து, தமிழகத்திற்கு, 700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலை ஒட்டி, அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தி துவக்கும்' என, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், நேற்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள, அணுமின் நிலையம், மூன்றாண்டுகளுக்கு முன்னரே, மின் உற்பத்தியை துவக்கியிருக்க வேண்டும். ஆனால், அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்கள் காரணமாக, பணிகள் பாதிக்கப்பட்டு, விரைவில் மின் உற்பத்தி துவங்கவுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாக உள்ளது; அந்த மின் உற்பத்தியில், தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பழுதடைந்த வால்வுகளை சரிப்படுத்தும் பணியில், இந்திய - ரஷ்ய விஞ்ஞானிகள், தற்போது ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில், வால்வுகள் சரி செய்யப்பட்டு, மும்பையில் உள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், சோதனை ஓட்டம், ஒருவார காலம் நடைபெறும். அணு மின் நிலையத்திலிருந்து, வரும், 14 அல்லது 15ம் தேதிகளில், மின் உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணு மின் நிலையத்தில், முதல் கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ள, 1,000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 450 மெகா வாட்; கர்நாடகத்திற்கு, 215 மெகாவாட்; கேரளாவிற்கு, 135 மெகாவாட் ஒதுக்கீடு செய்ய, முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறை மற்றும் மாநில முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையான, இந்த அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, 700 மெகாவாட்டை தமிழகத்திற்கு ஒதுக்குவது என, முடிவு செய்துள்ளது.இவ்வாறு உயர் அதிகாரி கூறினார். -நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தங்கராஜா அவர்களே... இந்தியாவில் எனக்கு தெரிந்தவரை 6 இடங்களில் அணு உலைகள் உள்ளன. தாராபூர் உலை (1961) ராஜஸ்தான் (1973) கல்பாக்கம் (1984 - 2 உலைகள்) , உத்திரப் பிரதேசம் (1991), குஜராத் (1993), கர்நாடகம் (2000). நீங்கள் சொன்னதுபோல எங்காவது ஒரு சம்பவம் நடந்துள்ளதா... இத்தனைக்கும் கல்பாக்கம் அணுமின்நிலையம் சுனாமியால் பாதிக்கப் படவில்லை. கல்பாக்கம் அருகே மீன்வளம் பாதிக்கப்படவில்லையே... கூடங்குளத்தில் 625 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோமே.. இன்று நமது தேவையில் ஒரு பகுதி கிடைக்கிறதே. அதை வரவேற்போம்.
கூடங்குளம் அணுமின்நிலையம் மின் உற்பத்தியை தொடங்குவதற்குள் எதனை பிரச்சினைகள்,எத்தனை போராட்டங்கள், எத்தனை விஷமப் பிரசாரங்கள் அத்தனை தடைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்து சட்டம் ஒழுங்கையும் பராமரித்தது தமிழக அரசு.எனவே தமிழகத்தில் மின்பற்றாக்குறை சீராகும் வரை உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.நிலைமை சீரடைந்தபின் பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.