மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரை மாவட்டத்திற்குள் பிப்., 21ம் தேதி வரை நுழைவதற்குத் தடை விதித்து, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குமுன், மதுரை வந்த ராமதாஸ், ஜாதி அமைப்புக்களின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
எவனுக்கும் உரிமை இல்லை' :
அவரது பேட்டி சட்டம், ஒழுங்கை பாதிப்பதாகக் கருதிய கலெக்டர், அவருக்கு, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என, கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, ராமதாஸ் சார்பில், வழக்கறிஞர்கள் கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், மீண்டும் நிருபர்களை சந்திந்த ராமதாஸ், "என்னை தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை' என, காட்டமாகப் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே, வழக்கறிஞர்களின் விளக்கம் திருப்தியளிக்காததால், பிப்., 21ம் தேதி வரை, மதுரை மாவட்டத்திற்குள், ராமதாஸ் நுழைய தடை விதித்து, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சமுதாயத்தில் ஜாதியை எதிர்பவர்கள் அரசின் சலுகையை பெற ஏன் ஜாதி முக மூடிகளை அணிய வேண்டும். ....காதலித்த பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் செயல் ஏன், காதலித்த பெண் வீட்டாரின் குடும்ப கவுருவத்தை குலைபதேன் ..இதெயெல்லாம் பார்க்கும்போது ஜாதிகள் உருவானது மக்களின் பண்புகளினால் இருக்குமே தவிர அவர்களின் தொழிலை வைத்து அல்ல என்பது தெரிகிறது. மக்களின் பண்பிர்கேற்றார் போல அரசர்களால் தொழிலில் பணிக்கப்டிருபார்கள், தவறு செய்பவர்கள், உதவி செய்பவர்கள் என்று ஆரம்பித்து மதி நுட்பங்களில் சிறந்தவர்கள் வரை வெவ்வேறு காலங்களில் பல வகையான் ஜாதிகள் உண்டானதை ஒரு நூறு ஆண்டுகளில் மக்களால் மறக்க முடியாது, மக்கள் நல்லவர்களாக மாறவேண்டும். நல்லவர்களாக மாறும்போது அணைத்து தரப்பு மக்களும் தங்களை மாற்றிகொள்வார்கள்..அணைத்து ஜாதிகளிலும் நல்லவர்கள் தோன்றினால்......காலபோக்கில்...நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்....ஜாதிகள் மீதுள்ள பற்று குறையும்...ஜாதிகள் குறையும்....சண்டைகள் குறையும்...சகோதரத்துவம் வளரும்.. பொருளாதரத்தில் உயர உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்...காதல் வியாபாரம் கூடாது, நடக்க காதல், வியாபார காதல் ...காதலை கேளிக்கூதாகிவிட்டார்கள்
மாம்பழ காரரை மதுரை மட்டும் இல்ல.. தமிழ் நாடுகுல்லாற கூட உள்ளே விட கூடாது. ஜாதி ஜாதின்னு தொண்டை கிழிய கதி இப்போ நாதி இல்லாம நிக்கறாரு. நல்ல வேணும். மக்களுக்காக உண்மைய பாடு படாத எல்லா அரசியல் வியாதியும் இப்படி தான் நாரடிகனும்.. அப்போ தான் புத்தி வரும்.. I am happy.. தோ பாரு இங்க பூசு.. istart the mejik....
இவர் மருத்துவர் என்று யார் சொன்னது? இவரே ஒரு சாதி என்ற வியாதி பிடித்து 20 வருடங்களாக தோற்று நோயாளியாக மற்றவர்களுக்கும் அந்த நோயை வேகமாக பரப்பி வருகிறார். இந்த நோயாளியைப் பிடித்து தனி ரூமில் அடைத்து டெங்கு/AIDS/TB போன்ற வியாதியஸ்தர்களை கவனிப்பது போன்று கவனக்க வேண்டும். இல்லையேல் பொடா -வில் போட்டுத் தாக்க வேண்டும். ...
வணக்கத்திற்குரிய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள் வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவு. இதேபோல் இந்த சனியன் சடை குருப்பை எல்லா மாவட்ட
ஆட்சியர்களும் தடை செய்தால் தமிழகம் இன்னொரு ஜாதி கலவரத்தில் இருந்து தப்பிக்கும். ஜாதியின் பெயரால் பிழைப்பு நடத்த நினைப்பவன் பிச்சை எடுத்து பிழைக்கலாம். தன்னை ஜாதி வெறியன் என்று கூறுபவன் நல்ல மனிதனாக இருக்க வாப்பில்லை. தின்டமை ஒரு கொடுமை தீண்டாமை ஒரு பாவசெயல் இதை சில முட்டாள்கள் படித்ததில்லை. தன்னை உயர் ஜாதி என்பவன் எதற்கு 20 சதவித இட ஒதிகிடு கேட்கிறான். எதில் இவன் உயர்ந்தவன் என்பது தெரியவில்லை. கல்வியும் பொருளாதாரமும் அனைவர்க்கும் கிடைத்துவிட்டால் அந்த சமுதாயமே சிறந்து.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.