சேவை வரி கட்ட நடிகர்கள் எதிர்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள, சேவை வரியை நீக்கக்கோரி, தமிழ் திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சங்கங்கள் உட்பட, 14 சங்கங்களின் சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே, உண்ணாவிரதத்தை, திரைப்படத் தயாரிப்பாளர் தாணு துவங்கி வைத்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், நடிகர் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்திக், பார்த்திபன், வி.எஸ்.ராகவன், டில்லிகணேஷ்; நடிகைகள் ராதிகா, ஊர்வசி, மும்தாஜ், சினகா; இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், சுந்தர்.சி; திரைபடத் தயாரிப்பாளர்கள் கேயார், கே.ராஜன், "பெப்சி' செயலர் சிவா உட்பட ஏராளமானோர் பங்கேற்று பேசினார். உண்ணாவிரதத்தையொட்டி, தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் நேற்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன; படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தன. மாலை, 5:00 மணி வரை, உண்ணாவிரதம் நடந்தது. இயக்குனர் கே.பாலச்சந்தர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.கறுப்புப் பணம் அதிகரிக்கும் :


உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களில், சரத்குமார், ராதாரவி, விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் "டிவி' நடிகர்கள், நடிகைகள் பலர் மாலை வரை இருந்தனர். இவர்களை தவிர, மற்ற நடிகர்கள், நடிகைகள் மேடைக்கு வந்த ஒரு மணி, இரண்டு மணி நேரத்தில் திரும்பிச் சென்றனர். கமல், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்கள் பங்கேற்கவில்லை. உண்ணாவிரதத்தில் பேசிய நடிகர்கள், சேவை வரி கட்ட கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சேவை வரி விதிப்பால் கறுப்புப் பணம் அதிகரிக்கும் என்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து முறையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (70)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
15-ஜன-201309:27:14 IST Report Abuse
g.s,rajan மாதாந்திர சம்பளம் வாங்கும் சாதாரண நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு, நேர்மையான முறையில் உண்மையாக உழைத்து வாங்கும் சம்பளத்தில் அவர்களிடம் இருந்து அவர்களின் அனுமதியைப்பெறாமலே அவர்களின் சம்பளத்தில் இருந்து சிறிதளவு கூட ஈவு இரக்கம் இல்லாமல் ,வெட்கம் இல்லாமல் மத்திய அரசின் வருமான வரித்துறை வருமான வரியை பிடித்தம் செய்கிறது TDS ( Tax Deduction at Source).ஆனால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மற்றவர்களிடம் வருமான வரியை கட்டுங்கள் என்று கெஞ்சுகிறது ,மிரட்டுவது போல் மிரட்டி கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறது . குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் கறுப்பிலும் வெள்ளையிலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் திரையுலக நடிகர்,நடிகைகளுக்கு வருமான வரியை கட்ட கசக்கிறது,சேவை வரியைக் கட்ட சோகம் பொங்குகிறது தங்களின் உண்மையான வருமானத்தை கூற அவர்களுக்கு மனம் இல்லை .சட்ட விரோதமாக பெறப்படும் பல கோடிகளுக்கு வரி கட்டாமல் அரசை ஏமாற்றி அசையும் மற்றும் அசையாத சொத்துக்களில் தங்கத்தில் தாறுமாறாக முதலீடு செய்து அவற்றை சாமானியர்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சகட்டுமேனிக்கு ஏற்றிவிட்டனர் .இவர்களிடம் இருந்து வருமான வரியை,சேவை வரியை கட்டாயம் வசூலிக்க வேண்டும் ,படத் தயாரிப்பு செய்பவர்கள் ,மீட்டர் வட்டிக்கு பணத்தை சினிமாவுக்கு விடுபவர்கள் ,மற்றும் நடிக நடிகைகளின் வருமானத்தை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் .அதிரடியாக சோதனை செய்து வரி கட்டாமல் இருக்கும் பணத்திற்கு சொத்திற்கு வருமான வரியை கட்ட உடனடியாக உத்தரவு இட வேண்டும் .மேலும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பணத்தை பறிமுதல் செய்து அவற்றை அரசாங்க கஜானாவில் சேர்த்து விட வேண்டும் ,இதைத் தவிர அரசை ஏமாற்றிய குற்றத்திற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஜாமீனில் வெளி வராதபடி கடும் சிறைத் தண்டனையை அளிக்க வேண்டும் இந்தியாவில் வெறும் இரண்டு அல்லது மூன்று சதவீத நபர்களே தங்கது வருமான வரியை அரசுக்கு தவறாமல் கட்டுகின்றனர் ,மீதம் உள்ளவர்கள் கட்டுவதே இல்லை . .நொடிக்கணக்கில்,சில நிமிடங்கள் நடிக்கும் விளம்பரங்களுக்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர்,வாங்கவும் செய்கின்றனர் .ஆனால் பலகோடிகளில் சம்பளம் வாங்கும் தென் இந்திய மற்றும் வட இந்திய சூப்பர் ஸ்டார்களே தங்களுடைய வருமான வரியை கட்ட மலைக்கின்றனர் ஆனால் மாத வருமானத்தை ஈட்டும் நடுத்தர மக்களிடம் அடாவடி செய்து அராஜகம் செய்து அவர்களின் சம்பளத்தில் வருமான வரியை பிடித்தம் செய்யும் வருமான வரித்துறையின் வீரத்தை,செயல் திறனை ,சாமர்த்தியத்தை எப்படி மெச்சாமல் இருப்பது? இவர்களிடம் இருந்து கட்டாயம் சேவை வரியை வசூலிக்க வேண்டும் .சாதாரண சம்பளத்தில் வருமான வரியை கட்டுபவர்கள் என்ன இளித்த வாயர்களா ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
sadhanandan palani - Sharjah,கனடா
13-ஜன-201319:45:53 IST Report Abuse
sadhanandan palani இப்போது கருப்பு பணம் சினிமாவில் இல்லை என்று யாரவது ஒருவர் சொல்ல முடியுமா ?யாரும் கோடி கோடியாக வாங்கும் நடிகர்களை பற்றி வாய் திறப்பதில்லை.திறந்தால் கால்ஷீட் கிடையாது .விஜய் போன்ற நடிகர்கள் பண்ணும் அலம்பல் தாங்க முடியவில்லை.நான் உள்ளிருந்து பேசுவதால் நன்றாக தெரியும் .இதை தினமலர் புப்ளிஷ் செய்யுமா என்பதே சந்தேகம்
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
09-ஜன-201318:55:33 IST Report Abuse
kamarud ஆமா ....நாங்க செய்ற சேவைக்கு [ஊரை கெடுக்கறது] வரி வேற கட்டணுமாக்கும் என்று நினைக்கிறாங்களோ ..........
Rate this:
Share this comment
Cancel
Gaja - dammam,சவுதி அரேபியா
09-ஜன-201308:28:48 IST Report Abuse
Gaja சமுகத்தை சீர்ரழித்த வரின்னு ஒன்னு போடலாம்
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
08-ஜன-201318:52:32 IST Report Abuse
Arumugam இந்தியாவில்தான் வாரிசு சினிமா, வாரிசு அரசியல் நடக்கிறது. ஐரோப்பாவில் இப்படி நடப்பதில்லை. நடிகர் ஜெய்சங்கர் மகன் ஒரு டாக்டரானதுபோல் ஏன் மற்ற சினிமாக்காரர்களின் வாரிசுகள் ஒரு டாக்டர் , விவசாயி , எஞ்சினியர் போன்ற வேலைக்கு போகாமல், அப்பா செய்யும் சினிமா தொழிலுக்கே வருகின்றார்கள் என்றால், நோகாமல் நுங்கு தின்பதுபோல் கோடிகோடியாய் பணமும், குட்டியும், புட்டியும் இந்த தொழிலில்தான் சுலபமாக கிடைக்கிறது என்பது இவர்களுக்கு தெரியும். ஆனால் இவர்களுடைய அப்பாவி ரசிகர்களுக்கு தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
Gokul - Bangalore,இந்தியா
08-ஜன-201318:48:35 IST Report Abuse
Gokul 10 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் பெறும் நடிகர்களுக்கு தானே சேவை வரி? சினிமா ஒரு கலை சேவை என்று சொல்லி தம்பட்டம் அடிக்கின்றார்களே சேவைக்கு வரி கட்ட என் இத்தனை ஆர்ப்பாட்டம்? எந்த நடிகனின் வீட்டிலாவது 20 லட்சத்திற்கும் குறைவான கார் இருகின்றதா? சூர்யா : நீங்களே பெருமையா நெனைக்கலாம் என்னோட சம்பளம் 1 லட்சம் ரூபாய்னு.... விஜய் : அண்ணா நம்ம சம்பளம் 2 லட்சம்... ஆர்யா : என்ன பாஸ் என்னோட சம்பளம் 50 ஆயிரம்னு தெரியாத பாஸ்...ரஜினி : கண்ணா நான் வாங்குறதே ஜுஜுபி காசு 5 லட்சம் தான், இது எப்டி இருக்கு...கமல் : எவ்வளவவு என்று சொல்ல கூடிய அளவு சம்பளம் எனக்கில்லை..நான் அதை சம்பளமாக எடுத்து கொள்ளவில்லை..எனது கலை பணிக்கு கிடைத்த சன்மானம் தான் அது..பிறகு எப்படி எனக்கு வரி விதிக்க முடியும்...(வழக்கல்ம் போல புரியல)...இப்படிக்கு ஒழுங்காக Income Tax, Professional Tax, Water tax, Air Tax, Soil tax, motor tax, road tax, Tax for the டக்ஸ், tax o tax கட்டும் ஒருவன்..........
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
08-ஜன-201318:24:03 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமாக்காரர்கள் நிழல் சினிமா பாத்திரமாக வாழ்பவர்கள்.., நிழல் வசன வரி பேசும் அவர்கள் நிஜம் சேவை வரி கட்டவேண்டும் என்று தோனல..,இவர்கள் தெரு கழை கூத்தாடிகள் அல்ல.., நிழல் கூத்தாடிகள்..,ரசிகர்களை இலவச சந்தையாகி பெரும் பணம் சமுதாயத்தில் சம்பாதித்து வருகிறனர்.இவர்கள் கற்பனைகலை சினிமா. டிவி-யில் தொடர்கள் போன்றவற்றில் பொதுமக்களை பார்க்க தூண்ட செய்து.., மின்சாரம் பற்றாக்குறை..,விளம்பரம்கள் மூலம் பொருள்கள் விலை உயர்வு..,நாகரிக உடை..,நகை பொதுமக்கள் கூடுதல் செலவு..,ரியல் எஸ்டேட் விலை ஏற்றம் மேலும் தவறான மோகம்..,கடல் கரை காதல் காமம்..,திருட்டு.,புகை பழக்கம்..,கற்பழிப்பு..,வன்முறைகள் போன்ற சமுக குற்றங்கள் ஏற்படுகின்றன.., இவர்கள் ஒரு கலையின் என்ற பொழுது போக்கு பெயரால் சமுதாயத்தில் மக்கள் பணத்தை சுரண்டும் லாட்டரிகள் .., அகவே மத்திய அரசு பொதுமக்களின் நலன் கருதி சினிமாவுக்கும் டிவி தொடர்கள் தடை செய்யவேண்டும்...,பொதுமக்கள் ஆக்க பூர்வமான கேளிக்கையாக புத்தக கண்காட்சி..,பொருள் காட்சி..,வணிக தொழில் காட்சி,,,சர்கஸ்..,விளையாட்டு போட்டிகள்..,நாடகம்..,நாட்டியம்...,இசை கச்சேரி போன்றவை சமுதாயத்தில் பொதுமக்களுக்கு ஆக்கமாகவும் ஊக்கமாகவும் உதவுகின்றன என்பதை கவனத்தில் அரசு கொள்ளவேண்டும்.சினிமாவும் டிவி தொடர்கள் மக்களுக்கு தேவை இல்லை என்பதை அறிய வேண்டும்..,நல்லவர் காமராஜர் நேரம் சரியில்லை என்பதால் அவர் தோற்கவில்லை. தவறான சினிமா கலையால் மாயை வென்றது.சமுதாயம் இன்று தன் தவறை உணர்கிறது - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
08-ஜன-201317:04:35 IST Report Abuse
LAX எப்படியும் ஏதாவதொரு ரீசன சொல்லி அந்த பணத்தை பொதுமக்கள்/ரசிகப்பெருமக்கள் கிட்டயிருந்து வசூலிச்சுருவீங்க. அப்புறம் என்ன மண்ணாங்கட்டி போராட்டமெல்லாம்? மைடியர் மார்த்தாண்டன் படத்தில் வரும் கவுண்டமணி சொல்லும் "வாங்க ஏழைங்களா", "பாவம் ரொம்ப ஏழைங்கன்னு" வரும் காமடி காட்சி வசனங்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
08-ஜன-201316:58:08 IST Report Abuse
K.Balasubramanian சேவை வரி இந்தியா முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது . மத்திய நிதி அமைச்சகம் நிர்வகிக்கும் இதை எவ்வாறு நிறுத்துவது என தெரிந்தே சென்னையில் இந்த நாடகம் .நியாயம் இவர்களுக்கு வழங்குவதை எதிர்க்க வில்லை .
Rate this:
Share this comment
Cancel
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201316:13:14 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar நமது தினமலருக்கு ஒரு வேண்டுகோள் இன்றைய நமது வாசகர்களின் ஒருமித்த கருத்தை தமிழக முதல்வருக்கு கொண்டு செல்ல வேணும் மேலும் இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை மறுபரிசீலனை செய்ய சொல்ல வேணும், இன்றைய நமது நண்பர்களின் கோபம் நமது மாநில மக்களின் கோபம் இதனை எதிரொலிக்க உதவிய தினமலருக்கு நன்றி, மேடையில் இருக்கும் இந்த கூத்தாடிகளை பாருங்கள் எல்லாருக்கும் முதல்வர் கனவு எல்லாருக்கும் புரட்சி தலைவர் mgr , கலைஞர் , மற்றும் நமது அன்பு மிகு முதல்வர் அன்னை ஜெயலலிதா என்று நினைப்பு, நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிய நாதாரிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்