திருச்சி: புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு போதையால் ஏற்பட்ட தகராறில், சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட, பி.டெக்., மாணவர் பலியானார். சம்பவத்தில் தொடர்புடைய, "ஹை கிளாஸ்' குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கண்டோண்மெண்ட், எஸ்.பி.ஐ., காலனியைச் சேர்ந்த மனோஜ்குமார். இவரது மனைவி மாலினி. மனோஜ்குமார் அமெரிக்காவிலும், மாலினி, தென் ஆப்ரிக்காவிலும் பணியாற்றுகின்றனர். இவர்களது மகன் அஜய் ரூபன், 21, மற்றும் இரு மகள்கள், தாத்தா பாதுகாப்பில் உள்ளனர். அஜய் ரூபன், தஞ்சை பிரிஸ்ட் பல்கலையில், பி.டெக்., இறுதியாண்டு மாணவர். கேம்பியன் பள்ளியில் அஜய் ரூபன் படித்தபோது, அவரது ஜூனியர் மாணவர்களுடன், தகராறு ஏற்பட்டது.
இருதரப்பாக பிரிந்து மோதிக் கொண்டதால், பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
போதை மருந்து : புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு, கண்டோண்மெண்ட் சோனா, மீனா தியேட்டர் அருகே அஜய் ரூபன், தன் நண்பர் சந்தான பிரபுவுடன் நின்றிருந்தார். அவ்வழியாக வந்த ராம் பிரசாத், அஜய் ரூபனை பார்த்தார். உடனடியாக மன்னார்புரம் சென்று, தன் நண்பர்களைஅழைத்து வந்தார். இவர்கள் அனைவரும், புத்தாண்டை கொண்டாட, "போதை' பயன்படுத்தியிருந்தாக கூறப்படுகிறது. அஜய் ரூபனை வம்புக்கிழுத்ததால், ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். ஆத்திரமடைந்த ராம்பிரசாத் தரப்பினர், அஜய் ரூபனை ஓட, ஓட துரத்தி, சரமாரியாக கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜய் ரூபன், காவேரி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். கொலைவெறி அடங்காத கும்பல், தனியார் மருத்துவமனைக்குள்ளும் புகுந்து, அஜய் ரூபனை சரமாரியாக அடித்து உதைத்து, கத்தியால் மீண்டும் குத்தினர். மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில், இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. கன்டோன்மென்ட் போலீசார், கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிந்து, ஐந்து பேரை, கைது செய்தனர். கடந்த, ஆறு நாட்களாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற அஜய் ரூபன், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த அஜய் ரூபனின் பெற்றோர், திருச்சிக்கு வந்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அஜய் ரூபன் உயிரிழந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட, ஐந்து பேர் மீது பதிவான கொலைமுயற்சி வழக்கு, கொலைவழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
"ஹைகிளாஸ்' குடும்பம் : கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும், லட்சக்கணக்கில் செலவழித்துப் , உயர்தர கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர். இவர்களது பெற்றோர், டாக்டர், இன்ஜினியர் போன்ற வேலைகளில், கைநிறைய சம்பாதிக்கின்றனர். கை நிறைய பணம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் காரணமாக போதைக்கு அடிமையாகி, கொலைவழக்கில் கைதாகி, தற்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெற்றோர்கள் வெவ்வேறு இடத்தில் வேலை செய்வதால் பையன் கேட்பதெல்லாம் வாங்கி தருகின்றனர்
பையனை சரி வர கவனிக்கமுடியதால், குற்ற உணர்ச்சியல்.அது இப்படி தவறில் முடிகிறது.
முதலில் சண்டை போடவேண்டும் என திட்டம் போடுகின்றனர், பின்னர் மது அருந்துகின்றனர்,அதாவது மது
அருந்தினால் போதையில் செய்துவிட்டான் என கூறி எஸ்கேப் ஆக. நான் பார்த்தவரையில் சண்டை போடவேண்டும்
என்றால் இம்மாதிரி செய்கின்றனர்
ERU
ஹை கிளாஸ் என அவர்கள் Social Status -ஐ உயர்த்தியது அதிக வசதியுள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டில் வேலை. இப்போது status இன்னும் உயர்ந்துவிட்டது. வழக்கு எண் 18/9 படத்தில் வருவதும் இதுபோன்ற கலாச்சார சீரழிவு பற்றிய செய்திதான். இந்த சினிமாவைப் பார்த்துவிட்டாவது ஹை கிளாஸ் குடும்பங்கள் என்று சொல்லப்படும் எத்தனைக் குடும்பங்கள் திருந்தின? அல்லது திருந்த முயற்சித்தன? அதனால் தனி மனித ஒழுக்கம் பாரம்பர்யம் என்பது மிக அவசியம். செய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு முழு பழியையும் ஊடகங்கள் மீதோ சினிமாவின்மீதோ போடுவது நொண்டி சாக்கு சொல்லி தப்பித்துக்கொள்ள வழிதான். இன்றும் எத்தனை பிள்ளைகள் (முக்கியமாக சின்ன கிளாஸ்-ல் படிக்கும் மாணவர்கள்) இன்டர்நெட் சென்டரை முற்றுகையிட்டுக் கொள்கின்றனர்? அதனால் பொதுமக்கள் பலர் அவசரமாக இன்டர்நெட் சென்டரை அணுகும்போது அவர்களுக்கு சிஸ்டம் கிடப்பதே இல்லை. இதற்கு இந்தமாதிரி சீரழிவுக்கு பெற்றோரே முக்கிய காரணம். படிக்கும் பிள்ளைகளுக்கு எதற்கு கையில் காசு? எதுவாக இருந்தாலும் நீங்களே நேரம் ஒதுக்கி நேரடியாக சென்று பொருளாக வாங்கிக் கொடுத்துவிடுங்கள். உணவு மற்று ஸ்நாக்ஸ் பேக் செய்து அனுப்பிவிடுங்கள். எக்காரணம் கொண்டும் கையில் பணம் கொடுக்காதீர்கள். இன்றெல்லாம் காஃபி ஷாப், ஐஸ் க்ரீம் பார்லர் போன்ற இடங்களில் பள்ளி யூனிஃபாம் அணிந்த மாணவர்களையே அதிக அளவில் காண முடிகிறது. இது மிகவும் தவறான பழக்கமாகும்.
வயிற்றை கலக்குகிறது. என்ன மாதிரி சமுதாயம் இது? யாரை எதை குற்றம் சொல்வது? சினிமாவா, ஊடகங்களா, அரசியலையா, ஆட்சியாலர்கலையா, கல்வி முறையையா, பெற்றோர்களா, ஆசிரியர்களையா, அல்லது குடும்பத்துடன் உட்கார்ந்து விளையாடி கழிக்கும் வீடியோ கேம்சையா? வெளி நாட்டில் இருந்து மானாவாரியாக இறக்கு மதி செய்யப் படும் இந்த வீடியோ கேம்ஸை தடை செய்வது பற்றி இது வரை யாரும் குரல் கொடுத்ததாக தெரியவில்லை. வல்லரசாக உருவெடுத்து என்ன பயன், இளைய தலைமுறை கேட்டுக் கழிசடைகளாக திரியும்போது?
ஹலோ ,முதல்ல நீங்க திருந்துங்க Dont complain on video games. if you complient against everything the u need to go back 50000 years back. All compliants should be made against parents only. They are responsible for all this activities.
A law should be made to parents will be put in jail for all their childs acts. then these stupid parents will change...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.