பதிவு செய்த நாள் :
கருத்துகள் (7)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சேலம்: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதில், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள், புதிதாக சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்ளிட்டவை குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும், 15 நாட்கள் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சிகளில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும், என

அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பயிற்சியன்று கலந்து கொள்ள முடியாத கட்டாயம் ஏற்படும் பட்சத்தில்,அப்பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், என விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி, 5ம் தேதி சேலம் மாவட்டதுவக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு, கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து, அந்தந்த வட்டார வளமையங்களில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், கலந்து கொள்வதற்காக, பல ஆசிரியர்கள் விடுமுறை (சி.எல்.,) எடுத்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால் பயிற்சியில், 20 சதவிகிதத்துக்கும்

Advertisement

மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில், புதிய கல்வி முறைகளை அரசு செயல்படுத்துகிறது. இவற்றை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
அப்பயிற்சியின் போது, விடுமுறை எடுப்பதால், அத்திறன்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. மாணவர் நலன் பாதிக்கும் என்பதாலேயே, பயிற்சியின் போது, விடுமுறை வழங்கக்கூடாது, என உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு பயிற்சியின் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்குகின்றனர். இதனால், அரசு திட்ட நிதி வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Joe joe - Chennai,இந்தியா
10-ஜன-201302:37:49 IST Report Abuse
Joe joe kjk
Rate this:
Share this comment
Cancel
Vijayakumar Iyyadurai - THOOTHUKUDI,இந்தியா
08-ஜன-201320:20:18 IST Report Abuse
Vijayakumar Iyyadurai தகுதியே இல்லாதவர்கள்தான் இப்போது ஆசிரியர்கள் இவர்கள் வேலை ரியல் எஸ்டேட் மற்றும் finance இவர்களுக்கு இவ்ளோ சம்பளம் வேஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201312:36:54 IST Report Abuse
GANAPATHI V "பணிக்கு வராதவர்களை டிஸ் மிஸ் செய்யுங்கள் " எல்லாரும் தன்னால வருவானாக ......
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
08-ஜன-201311:12:55 IST Report Abuse
தமிழன் அம்மா மனசு சங்கட படாம வேலை செய்யுங்க
Rate this:
Share this comment
Cancel
Benjamin Leonard - Dindigul,இந்தியா
08-ஜன-201310:20:50 IST Report Abuse
Benjamin Leonard Training for teaches is for the development of not only the teachers but also the students. If the teachers fail to understand this basic idea of training courses and if they continue to refrain from these courses, their increments could be cut until they do the training. May be the teachers also do the 'tests' after going through the training.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Arifjan ,குவைத்
08-ஜன-201310:06:04 IST Report Abuse
sivakumar ஆசிரியர் பணி உலகத்திலிய உயர்ந்த, மதிப்பு மிக்க பணி. அந்த பணியில், தியாகம்,சேவை ,ஒழுக்கம், ஒன்றிய நல்ல மனிதர்கள் மட்டுமே அமரவேண்டும். படித்த படிப்பிற்கு விதைத்த அறுவடை இந்த பணி என்று நினைப்பவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு வைக்கப்படும் குரு ஸ்தானம் மிகவும் உயரியது அது வெறும் படிப்பையும்,மதிபென்னையும் வைத்து கொடுக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
08-ஜன-201308:53:00 IST Report Abuse
adithyan ஆசிரியர் தேர்வில் எத்தனை சதம் தேர்விபெற்றார்கள்? மூன்று சதம். இதில் இருந்து தெரிவது, தகுதி இல்லாதவர்கள் ஆசிரியர்களாக வரப்பார்கிரார்கள். இவர்களால் என்ன சொல்லி தரமுடியும்? ஒரு கணக்கு வாத்தியாருக்கும் கை ஏட்டில் உள்ள கணக்கை கரும்பலகையில் போட்டு காட்டு வார்கள். மேலாக, ஒரு கணக்கையும் போட்டு காட்ட மாட்டார்கள். என் என்றால் அவர்களுக்கே தெரியாது. இந்த லட்சணத்தில் மாணவர்களை குறைவாக மதிப்பெண் வாங்குவதை காட்டி பிரைவேட் வரச்சொல்லி தான் கொடுத்த லஞ்சத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். இன்றைய அரசு பள்ளி வாத்தியான்கள் அதனையும் வெறும் கும்பல். மாணவர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. ஆசிரியனுக்கு தெரிந்தால் தானே சொல்லி கொடுக்க. இந்த பெயில் ஆன அனைவரும் தேர்வு நடத்த கூடாது என்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.