district news | லாரி ஓட்டுனர் அடித்து கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி ஓட்டுனர் அடித்து கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

Added : ஜன 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி : லாரி ஓட்டுனரை அடித்து கொலை செய்து, கழிவுநீர் கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த, மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், மகாலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி, 27. இவர், சென்னை கன்டெய்னர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் உள்ள கன்டெய்னர் யார்டுக்கு, ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி சரக்கு ஏற்றி வந்து, அங்கு இறக்கினார்.
பின், கன்டெய்னர் யார்டுக்கு தொடர்பு கொண்டபோது, லாரி மட்டும் இருக்கிறது. ஓட்டுனர் காணவில்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை திருவொற்றியூர் நெடுஞ்சாலை கழிவுநீர் கால்வாயில், 27 வயது
மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கால்வாயில் இருந்த பிணத்தை மீட்டனர்.காணாமல் சென்ற லாரி ஓட்டுனர் என, தெரிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை