Advertisement
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது அருந்தியவர்கள் விரட்டியடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை, காவல் துறையினர் விரட்டி அடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அண்ணா விளையாட்டரங்கம் உள்ளது. இதை சுற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம், வணிக வரி துறை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள், காலை மற்றும் மாலை நடைபயிற்சிக்காக, அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வருவர். அவர்கள் வசதிக்காக, 10 லட்சம் ரூபாய் செலவில், நடைபயிற்சி தளம் மற்றும் வேலி அமைக்கப்பட்டது.
நாளடைவில் அவை மாயமாகிவிட்டன. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், காவல் துறையினர், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினரும் நடைபயிற்சிக்கு வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்வோர் சென்ற பிறகு, இரவு, பலர் மது அருந்த வருகின்றனர். மைதானத்தில் கும்பலாக அமர்ந்து மது சாப்பிடுகின்றனர்.
இதை தடுக்க, காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பழனி தலைமையில், காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, திடீர் சோதனை நடத்தினர். மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை விரட்டி அடித்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.