காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில்
சில்லரை நாணயங்கள் என, கூறி, உப்பு பாக்கெட்டுகளை கொடுத்து, மர்ம நபர் 11
ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது, வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
கடை வைத்திருப்போருக்கு சில்லரை நாணயங்கள் அவசியம். கடைக்கு
வருவோர் ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் கொண்டு வருவதால், வியாபாரிகள்
தங்களுக்கு தேவையான நாணயங்களை, சிறிய வியாபாரிகளிடம் வாங்குகின்றனர். இதை
பயன்படுத்தி, நூதன முறையில் மோசடி செய்ய துவங்கி உள்ளனர்.
சில
தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் டி.கே., நம்பித் தெருவில் உள்ள புத்தகக்
கடைக்கு, தொலைபேசியில் அழைப்பு வந்தது. கடையிலிருந்த ஊழியர், தொலைபேசியை
எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், தான் பிரபல துணிக்
கடையிலிருந்து பேசுவதாகவும், தன்னிடம் 11 ஆயிரம் ரூபாய்க்கு நாணயங்கள்
உள்ளதாகவும், வேண்டுமானால் வந்து வாங்கிச் செல்லுங்கள்' என்றார்.
உடனே
கடை ஊழியர் 11 ஆயிரம் ரூபாயுடன், சம்பந்தப்பட்ட கடைக்கு சென்றார். இவர் கடை
முன் வாகனத்தை நிறுத்தியபோது, கடை நுழைவு வாயில் அருகிலிருந்து, வாலிபர்
ஒருவர் கைப்பையுடன் வந்தார்.
கைப்பையில் நாணயங்கள், பிளாஸ்டிக் பையில்
கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் மேலே 11 ஆயிரம் ரூபாய் என
எழுதப்பட்டிருந்தது. உடனே அந்த ஊழியர், 11 ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு,
பையை பெற்றுச் சென்றார்.
கடையில் சென்று பையிலிருந்து நாணயங்களை
எடுத்தவர், அதிர்ச்சி அடைந்தார். மேல் பகுதியில் மட்டும் நாணய மூட்டை
இருந்தது. அதன் கீழே கல் உப்பு பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
நாணய மூட்டையில் 50 ரூபாய் மட்டும் இருந்தது. இச்சம்பவம் வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.