சிட்னி. ஆஸ்திரேலியாவில் இன்று வரலாறு காணாத வெயில்அடித்தால் ஆங்காங்கே புல் புதர்கள் தீ பற்றி எரிந்தன. இதனால் பல வீடுகளும் தீயில் எரிந்து நாசம் ஆகின. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் அவசர நிலை பிரகடன படுத்தப் பட்டுள்ளது. சிட்னி அமைத்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இன்றைய வெயில் 42.3°C தொட்டது. இத்துடன் பலத்த அனல் கற்றும் வீசியதால் பல இடங்களில் உள்ள புல் புதர்கள் மள மள வென தீ பிடித்து எரிய தொடங்கின. தீயுடன் பலத்த காற்று வீசியதால் தீ கட்டுகடங்காமல் 75 ஹெக்டர் தூரம் பரவின. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மானிய மகாணங்களில் இன்று மற்றும் 600 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வண்டிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீ அணைக்க போராடி வருகின்றன. இந்த தீயில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின. இன்னும் பல இடங்களில் இந்த தீ, சிறிய ஊர்களை சுற்றிலும் சூழ்ந்து எரித்து கொண்டு இருப்பதால் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வர இயலாமல் உள்ளனர். அதே நேரத்தில் இந்த தீயால் அவர்கள் வீடுகள் எரியும் அபாயம் உள்ளதால் பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் 130 இடங்களில் தீ கட்டுப்பாடின்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ காற்றினால் 'மோட்டார் வே'யில் சென்ற சில வாகனங்கள் தீ பிடித்து எரிந்தன. இன்றைய வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மக்கள் கூட்டம் கடற்கரைகளில் நிரம்பி வழிந்தன. மிருக காட்சி சாலையில் விலங்குகளுக்கு குளிரூட்டப்பட்ட தண்ணீர் தொடர்ந்து பீச்சிஅடிக்கும் வண்ணம் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் மிருகங்களுக்கு நீருடன் பனிக்கட்டிகள் கொடுக்கப்பட்டன. மொத்தத்தில் இன்று ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெப்பத்தை கண்டது. அடுத்த வாரம் இதை விட மிக அதிக வெப்பம் தாக்கும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுந்தர் ஆஸ்திரேலியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.