திருவாடானை:அறுவடை பாதிப்பால், நூற்றும் மேற்பட்ட வெளி மாவட்ட நெல் அறுவடை இயந்திரங்கள் ஏமாற்றத்துடன் சொந்த ஊர் திரும்பி செல்லும் பரிதபாம் நீடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் மட்டும் 42 ஆயிரம் எக்டேரில் நெல் பயிர் சாகுபடி நடக்கிறது. வறட்சி ஏற்பட்டபோது, தஞ்சைக்கே நெல் கொடுத்த பூமி என்ற சிறப்பும் உண்டு. நடப்பாண்டு பருவமழையை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், இந்த பகுதியில் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியங்களில் சாவியாகிப்போன நெற் பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது.
ஆண்டு தோறும் அறுவடை மாதங்களில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான கதிர் அறுவடை இயந்திரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவது வழக்கம். மணிக்கு ரூ.800 முதல் 900 வரை வாடகை நிர்ணயிக்கபட்டு அறுவடையில் ஈடுபடுத்தபடும். சுலபமான முறையில் அறுவடை செய்வதால் விவசாயிகள் ஆர்வமுடன் இந்த இயந்திரங்களை பயன்படுத்திவர். இதனால், பொங்கலுக்கள் அறுவடை பணியும் முடிந்து விவசாயிகள் உற்சாகத்துடன் காணப்படுவர்.
ஏமாற்றம்: கடந்த சில நாட்களாக, நெல் அறுவடை இயந்திரங்கள் ஒவ்வொன்றாக மாவட்டத்தை நோக்கி படையெடுத்தன. எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாததால், தொழில் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு இயந்திர உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து, இங்கு நமக்கு வேலை இல்லை என, உணர்ந்த அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சிலர் தங்களது வாகனங்களுடன் சொந்த திரும்பிச் சென்றனர்.
விவசாயி, நாகநாதன் கூறியதாவது: பருவ மழை பொய்த்தால், எந்தாண்டும் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதெரியாமல், வெளிமாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள் பல ஊருக்கு வந்து, தொழில் இல்லாமல் திரும்பிச் சென்றன, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.