ராமநாதபுரம்:அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்துள்ள தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் இருக்கிறதா என, போலீசார் விசாரித்ததில், இடம் எதுவும் வாங்கப்படவில்லை என, தெரியவந்துள்ளது.திருப்பூர் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கத்திடம் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்க கடன் பத்திரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், உளவு பிரிவு போலீசார் நிலங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது, ருமானவரித்துறையினர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பத்திரபதிவு அலுவலகங்களில், ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 18 பேரின் பெயர் பட்டியலை வழங்கி, இந்த பெயர்களில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளதா, என விபரம் கேட்டுள்ளனர்.
இதேபோல் மத்திய புலனாய்வு துறையினரும், கடலை வியாபாரி ராமலிங்கம் தொண்டியில் நிலங்கள் வாங்கியுள்ளாரா என, அப்பகுதி புரோக்கர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். கடலை வியாபாரிக்கு நிலம் வாங்கி கொடுத்ததாகவோ, விற்றதாகவோ எந்த தகவலும் இல்லை.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலை வியாபாரி ராமலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலங்கள் பதிவாகவில்லை, என பத்திர பதிவு அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், இட புரோக்கர்களும் மொத்தமாக இதுவரை யாரும் இடம்வாங்கவில்லை, என கூறினர். இதன்மூலம் ராமலிங்கத்திற்கு தொண்டியில் இடம் ஏதுவுமில்லை என தெரியவந்துள்ளது, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.