பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் கொள்ளை போகும் மணல் குறித்து அதிகாரிகள் பாராமுகமாய் இருப்பதால், காவிரி குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது. பரமக்குடி வைகையில் மணல் இன்றி தரை தட்டிய நிலையில், ஒரு ஆண்டுகளாக குவாரிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உரப்புளி அருகில் செயல்பட்டு வந்த மாட்டு வண்டி குவாரியையும் பொதுப்பணித்துறையினர் மூடியுள்ளனர்.இதனால், பரமக்குடியில் பெருமளவில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால், திருச்சியில் இருந்து லாரி மூலம் வரவழைக்கப்படும் ஒரு லோடு மணல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கிடையில், மணல் திருடர்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் மூலம் தலைச்சுமையாக மணல் அள்ளுவது அதிகரித்துள்ளது. ஆற்று படித்துரைகளில் தடுப்பு கம்பிகள் ஏற்படுத்தி வைத்திருந்தாலும், கடத்தல்காரர்கள் எறும்பு கூட்டமாய் ஆற்று மணலை மொய்த்து திருடி வருகின்றனர். இதனால், ஆற்றுக்குள் மெகா சைஸ் பள்ளங்கள் ஆங்காங்கே உருவாகியுள்ளன. சாக்கு மூடை மணல் 10 முதல் 20ரூபாய் வரை விற்கப்படுகிறது. காவிரி குழாய் உடைப்பு: ஆற்றில் ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களால், காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே எலும்பு கூடுகளாக வெளியில் தெரிய துவங்கியுள்ளன. பிளாஸ்டிக் பைப்புகளாக இருப்பதால் அதிகப்படியான நீர் வரும் போது அழுத்தம், மண் வெட்டிகளால் சேதப்படுத்தப்பட்டு அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகின்றன.
காலதாமதாக சரிசெய்யப்படும் உடைப்பால், பல லட்டசம் லிட்டர் ஆற்றில் வீணாகிறது. இதனால், நகர் புறங்களுக்கு தண்ணீர் சீராக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், பரமக்குடியிலிருந்து சத்திரக்குடிக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பங்களும் விபத்து அபாயத்தில் உள்ளன. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடிக்கடி சேதமாகும் பிளாஸ்டிக் பைப்பிற்கு பதிலாக இரும்பு குழாய்களை பதித்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.