E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பணிஓய்வு,பதவி உயர்வால் கூண்டோடுகாலியாகும் வனத்துறை:பணியிடங்கள்:கேள்விக்குறியாகும் வனப்பாதுகாப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
22:44

வத்திராயிருப்பு:வனத்துறையில் வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வுபெறுவோர், பதவி உயர்வு பெறுவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், ஏராளமான கடைநிலை ஊழியர் பணியிடங்கள் காலியாகும் நிலை உள்ளன. இந்நிலையில், கோடை காலம் நெருங்கிவிட்டதால், போதிய பணியாளர்கள் இன்றி, வனத் தீ, மரக்கடத்தல் போன்றவற்றால், வனப்பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, மதுரை, விருதுநகர் மண்டலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த வனச்சரகங்களில், வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில், இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதிலாக, அதற்கு அடுத்த நிலையில் உள்ள,கடைநிலை ஊழியர்களான ,வாச்சர், கார்டு போன்றவர்கள் பதவி உயர்வு பெறுகின்றனர். இதனால்,வனப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அடிமட்டப் பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.
வனத்துறையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக, அடிமட்டப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதை போக்க, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் "தீ தடுப்பு காவலர்கள்' எனவும், மற்ற நேரங்களில் "வேட்டைத்தடுப்பு காவலர்கள்' எனவும்,தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்து, பணியமர்த்துகின்றனர். இவர்களது சம்பளத்திற்காக அரசு வழங்கும் நிதி குறைவாகவே வருவதால், குறைந்த பணியாளர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் தீ தடுப்பு காவலர்களுக்கு சம்பளமாக ,மாதம் வெறும் 2,500 , வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 4,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த சம்பளத்தை வைத்து பிழைக்க முடியாது என்பதால், இவ்வேலைக்கு யாரும் முன்வருவதில்லை. தற்போது கோடைகாலம் நெருங்கி விட்டதால், வனத்தீயால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும், மரக்கடத்தலில் இருந்தும் வனத்தை பாதுகாக்க, வழக்கத்தை விட கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவர்.
இந்நிலையில், பணிஓய்வாலும், பதவி உயர்வாலும் அடிமட்ட பணியாளர்களும் குறைவதால், வனப்பாதுகாப்பிற்கு அடிமட்ட பணியாளர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் சரகத்தில் மட்டும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு, 60 க்கு மேற்பட்டோர் ஓய்வு பெறுகின்றனர். 133 பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். தற்காலிக ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, வனத்தை பாதுகாப்பது என்பது இயலாத காரியம். இதுபோன்ற காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, வனப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதற்கு வனத்துறை தற்போதே முழு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.