கடலூர்:தமிழக
மக்களுக்கு பொங்கல் பண்டிகையொட்டி அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள்
பாக்கெட் செய்வதில் சுய உதவிக்குழு பெண்கள் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர்.தமிழத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ
மழை போதியளவு பெய்யவில்லை. காவிரி தண்ணீரும் தேவையான அளவுக்கு
கிடைக்கவில்லை. அதனால் வழக்கமாக அமோக விளைச்சல் தரும் சம்பா பருவ நடவு
கணிசமாக குறைந்து விட்டது. பல இடங்களில் நடவு செய்யாமல் விவசாயிகள் விட்டு
விட்டனர்.வழக்கமாக ஜனவரி மாதத்தில் நெல் அறுவடை செய்து புதிய அரிசியில்
பொங்கலிட்டு உழவருக்கு உறுதுணையாக இருந்த கால்நடை மற்றும் இயற்கையை
வழிபடுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு போதியளவு விவசாயம் இல்லாததால்
விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு
இன்னும் 5 நாட்களே உள்ளன.தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள், பொங்கல்
பண்டிகையை சிறப்பாக கொண்டாட முதல்வர் ஜெயலலிதா விலையில்லா அரிசி, சர்க்கரை
மற்றும் 100 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழகம் மூலம் அரிசி, சர்க்கரை, 100 ரூபாய் ஆகியவை ஒரு பையில்
போட்டு மக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்கப்படவுள்ளது.கடலூர் மாவட்டத்தில் 6
லட்சத்து 55 ஆயிரத்து 769 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஒவ்வொரு
அட்டைதாரருக்கும் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே விலையில்லா பொருட்களை வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அரிசி, சர்க்கரை பாக்கிங் செய்யும் பணி
தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 7 தாலுகாக்களிலும் உள்ள
நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் இந்த பணி தீவிரமாக நடந்து
வருகிறது.இது குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அனுசுயா
கூறுகையில், "முதல்வர் உத்தரவுப்படி சர்க்கரை, அரிசி, 100 ரூபாய் ஆகியவை
ஒரே பையில் போட்டு வழங்கப்படும். அதற்காக சர்க்கரை பேக்கிங் செய்யும் பணி
வேகமாக நடந்து வருகிறது. சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் இதில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி நிறைவடையும்'
என்றார்.உள்தாள் பணி நிறுத்தம்பொங்கல் பண்டிகையொட்டி மக்களுக்கு விலையில்லா
பொங்கல் பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளதால் ரேஷன்
அட்டையில் உள் தாள் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பத்து
நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்தாள் வழங்கும் பணி துவங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.