திருப்புத்தூர்:சிவகங்கை மாவட்டம்,வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பகுதியை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர்" இகோ சென்சிடிவ் ஏரியா' வாக அறிவித்துள்ளதால்,அப்பகுதியில், 5 கி.மீ சுற்றளவில் சுற்றுச்சூழலைபாதுகாக்க கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வனப்பகுதி அழிக்கப்படுவதை அடுத்து,கடந்த 1989ம் ஆண்டு முதல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர்அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி வனவிலங்கு சரணாலயம்,தேசிய பூங்காக்கள் உள்ள பகுதியில்"இகோ சென்சிடிவ் ஏரியா' அதாவது, சுற்றுச்சூழலை கட்டாயமாக பாதுகாக்க வேண்டிய பகுதியாகஅறிவித்தது.இப்பகுதியில் 10 கி.மீ.,சுற்றளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளைஅறிவித்தது. மரம் வெட்டுதல்,வெடி மருந்து பயன்படுத்துதல், வாகனத்தால் ஒலி,ஒளி,புகை மாசுபடுதல்,வேகமான பயணம்,இரவில் போக்குவரத்து,கூடுதல் உயரத்திற்கு கட்டிடம் கட்டுதல்,மின்,மொபைல் டவர்அமைத்தல்,செங்கல் சூளை,அடுப்புக் கரி மூட்டம்,இயந்திரங்களைப் பயன்படுத்துதல்,மாசு ஏற்படும் தொழில்கள்,பாலித்தீன் பயன்பாடு,ரியல் எஸ்டேட்,மரம் வெட்டுதல் போன்றவற்றிற்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இந்த விதிமுறைகளை அமல்படுத்த "இகோ சென்சிடிவ் ஏரியா' வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த வனத்துறை,வன உயிரின ஆர்வலர்,தாசில்தார்,பி.டி.ஓ ஆகியோர்அதில் பங்கேற்று ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டது.நேற்று வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுகுடி பார்வையாளர்மையத்தில் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கமிட்டி தலைவர், மாவட்ட வன அலுவலர்ராகேஷ் குமார் சகானியா தலைமை வகித்தார். உறுப்பினர்கள் வனச் சரக அலுவலர் சண்முகம்,திருப்புத்தூர் தாசில்தார் அமிர்தலிங்கம், சிங்கம்புணரி பி.டி.ஓ. ராமமூர்த்தி,பேராசிரியர் கோபிநாத் பங்கேற்றனர். சரணாலயத்தைச் சுற்றிலும் உள்ள 5 கி.மீ., பகுதியை "இகோ சென்சிடிவ் ஏரியா' வாக அறிவித்து செயல்படுத்த முடிவானது.
அதில் ஒரு கி.மீ., சுற்றளவில் மேற்கண்ட கட்டுப்பாடுகளைமுழுமையாக அமல்படுத்தவும், அடுத்து 5 கி.மீ., சுற்றளவில் கமிட்டி அனுமதித்தால் சுற்றுச்சூழல்பாதிப்பில்லாவிட்டால் அனுமதி அளிக்கவும் முடிவானது. இக்கூட்ட ஆலோசனைமத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.