E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பரங்கிப்பேட்டையில் கேட் பராமரிப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சீராக இயக்கம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
23:21

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே கேட்டில் நேற்று பராமரிப்பு பணி நடந்ததால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சீராக இயக்கப்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தது.பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே கேட் வழியாக சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது. அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் ரயில்வே தண்டவாளங்கள் கீழ் உள்ள சிலிப்பர் கட்டைகள் கீழே உட்கார்ந்து விடுவதாலும், வாகனங்கள் செல்லும் போது சிலிப்பர் கட்டைகள் முழுவதும் மண்மேடுகள் தூர்ந்துவிடுகிறது. இதனால் ரயில்கள் வேகமாக செல்லும்போது செக் ரயில் உடைந்துவிடும் என்பதால் ஆண்டுதோறும் ரயில்வே கேட்டில் பராமரிப்பு நடந்து வருகிறது.இந்தாண்டிற்கான பராமரிப்பு பணி நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. அதனால் ரயில்வே கேட்டுகள் இருபக்கமும் மூடப்பட்டது.

மதியம் 2.00 மணிக்கு பராமரிப்பு பணி முடிந்தது. சிதம்பரம் ரயில்வே உதவி செயற்பொறியாளர் ஜெயராம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் பராமரிப்பு பணி நடக்கும் இடத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் சென்னை- திருச்சி, திருச்சி- சென்னை, சரக்கு ரயில், வாரனாசி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்கள் நேற்று காலை 10 மணி முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.அதேபோல் சிதம்பரம்- பரங்கிப்பேட்டை பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தது. இருசக்கர வாகனங்கள் மட்டும் ரயில்வே கேட் அருகே ரயில்வே பாதையில் நீளமான பலவை போடப்பட்டு அதன் மீது சென்று வந்தது. மதியம் 2.00 மணிக்குமேல் ரயில்வே கேட் வழியாக வழக்கம்போல்பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.