பரங்கிப்பேட்டை:தானே
புயலில் சேதமடைந்த ரயில்வே பிளாட்பார ஷீட்டுகளை சீரமைக்காததால் வெயில்,
மழையின் போது பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை
அடுத்த அகரம் ரயில் நிலையத்தில் பயணிகள் உட்காருவதற்கான பிளாட்பாரத்தில்
இரும்பு கொட்டகை உள்ளது. தானே புயலின்போது கொட்டகையின் மீதிருந்த ஷீட்டுகள்
சேதமடைந்தன. ஷீட்டுகள் விழுந்து ஒரு ஆண்டாகியும் இன்னும் சீரமைக்காததால்
பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.விழுப்புரத்தில் இருந்து
மயிலாடுதுறை, நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் பாசஞ்ஜர் ரயில்கள்
பரங்கிப்பேட்டையில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. பரங்கிப்பேட்டையை
சுற்றியுள்ள மக்கள், கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். வெயில்,
மழையின் போது ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.