கொடைக்கானல் : பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலித்த கல்லூரி மாணவனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக கொடைக்கானல் வந்த நர்சரி பள்ளி ஆசிரியை, போலீசாரிடம் சிக்கினார். மதுரை இந்திரா நகரில் வசிப்பவர் அந்தோணிசாமி. இவரது மகள் ஜெனிபர்தெரசா,18. நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. கட்டாய திருமணத்திற்காக தனது மகளை சிலர் கடத்தி சென்றிருப்பதாகவும், அவரை மீட்டு தருமாறும் அந்தோணிசாமி, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் பெண்ணின் படத்தை அனுப்பி வைத்தனர்.விசாரணையில், அந்த பெண் கொடைக்கானல் ஏரி பகுதியில் ஒருவருடன் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், இருவரிடமும் விசாரணை செய்ததில், அந்த வாலிபர் மதுரை சிந்தாமணி ரோடு பகுதியில் வசிக்கும் அருள் பிரகாசத்தின் மகன் ஆண்ட்ரூஸ்ஜோன்ஸ்,19, என்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் வந்ததாக கூறினர்.
இருவரின் பெற்றோர்களையும் போலீசார் வரவழைத்தனர். ஸ்டேஷன் வாசலில் குடுமிபிடி சண்டையில் காதலர்களின் பெற்றோர் ஈடுபட்டதால் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், தல்லாகுளம் போலீசார் முன்னிலையில் காதலர்களை ஒப்படைத்து பிரச்னையை மதுரையில் தீர்த்துக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.