பொள்ளாச்சி : பொள்ளாச்சி
நகரில், முக்கிய ரோடுகளில், கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால்
அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அவசர காலத்துக்கு
இவ்வழியை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி
நகரில், நாளுக்குநாள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப ரோடு வசதி இருப்பதில்லை. நகரில்
உள்ள பெரும்பாலான ரோடுகள் உருக்குலைந்தும், குண்டும், குழியுமாகவும்
காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
வாகன போக்குவரத்து
பயன்படுத்தப்படும் முக்கிய ரோடுகள், போதிய அகலமின்றி குறுகலாக உள்ளதும்,
வாகன நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, பல்லடம் ரோடு, உடுமலை
ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு
சரக்கு லாரிகள் அதிகளவில் வருகின்றன.
வணிக வளாகங்களில், பார்க்கிங் வசதி
இல்லாததால், இந்த வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன. சரக்கு
இறக்கிய பின்பும், ரோட்டை ஆக்கிரமிக்கும் வகையில் இந்த வாகனங்கள்
நிறுத்தப்படுகின்றன.
இதனால், இவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத
நிலை ஏற்படுகிறது. திருவள்ளுவர் திடல் இருந்து மார்க்கெட் ரோடு வரை கனரக
வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பல வாகனங்கள் ரோட்டோரத்தில்
நிறுத்தப்படுகிறது. இப்பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது
வாடிக்கையாக தொடர்கிறது.
நகருக்குள் மட்டும் அதிகரித்திருந்த வாகன
போக்குவரத்து நெரிசல், தற்போது பல இடங்களிலும் அதிகரித்துள்ளதால், அவசர
காலத்துக்கு கூட மக்கள் இந்த வழித்தடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து போலீசாரும், "மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரங்களில், சரக்கு
கொண்டு வாகனங்கள் தேவையின்றி ரோட்டில் நிறுத்தி வைக்கக்கூடாது,' என,
எச்சரித்துள்ளனர். ஆனால், இந்த உத்தரவை யாரும் பின்பற்றவில்லை.
போக்குவரத்து
போலீசார் கூறுகையில், "நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும்
பணியில், டிராபிக் வார்டன்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாகன
ஓட்டிகளுக்கு, நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க பலமுறை அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது. மக்களும், விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே
இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள்
கூறுகையில், "மக்கள் நடமாட்டமுள்ள முக்கிய பகுதிகளில் காலை 8.00 மணிக்கு
மேலும், இரவு 10.00 மணி வரையும் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது என,
ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சரக்கு இறக்கியதும், லாரிகளை உடனடியாக
அப்புறப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக
வளாகங்களிலும் "பார்க்கிங்' வசதி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.