புதுடில்லி: டில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பலியான மாணவியின் குடும்பத்துக்கு, அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கவும், அவரது சகோதரருக்கு அரசு வேலை வாய்ப்பு தரவும், டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. டில்லி மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது: டிசம்பரில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில், டில்லியை சேர்ந்த, மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்தார். இதற்கு எதிராக, போராட்டங்கள் வெடித்தன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வகை செய்யும், புதிய சட்டத்துக்கு, இந்த மாணவியின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்யும்படி, டில்லி மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. உடன், மாநில அரசு உயரதிகாரிகள், ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு, டில்லி பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள, அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் மூத்த சகோதரனுக்கு, மாநில அரசு சார்பில் வேலை வழங்கவும், இளைய சகோதரனுக்கு, டில்லியில் உள்ள, பிரபல கல்லூரியில், "சீட்' ஒதுக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு எடுக்கவில்லை இவ்வாறு டில்லி மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, ராஜஸ்தானை சேர்ந்த, அஸ்ரம் பாபு என்ற சாமியார், " டில்லி மாணவி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்களிடம், "சகோதரர்களை என்னை விட்டு விடுங்கள்' என, கூறியிருந்தால், இந்த சம்பவமே நடந்திருக்காது' என, கூறியதற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின், சகோதரர் கூறியதாவது: அஸ்ரம் பாபு, மிகச் சிறந்தவர். அவர் மீது, மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் கூறியது, நடைமுறைக்கு ஒத்து வராது. இதுபோன்ற கருத்துக்களை, அவரிடம் இருந்து, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.