புதுடில்லி: ஐ.ஐ.டி., பட்டப் படிப்புகளுக்கான ஆண்டுக் கட்டணம், இந்த ஆண்டு முதல், 80 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.ஐ.டி.,யின் ஆட்சிக்குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதையொட்டி, 50 ஆயிரம் ரூபாய் என, இருந்த வருடாந்திரக் கல்விக் கட்டணம் இனி, 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்தக் கட்டண உயர்வு, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., இயக்குனர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கும் குழு ஆகியோர் அளித்த பரிந்துரையின் பேரில், இந்தக் கட்டண உயர்விற்கு, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ககோத்கர் குழு, ஐ.ஐ.டி.,யின் பட்டப் படிப்புக்கான வருடாந்திர கட்டணத்தை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 2.25 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்தது. இதற்கு அப்போது, பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பின், இதனை, ஐ.ஐ.டி.,யின் இயக்குனர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கும் குழு ஆகியவை, திருத்தி, 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தின.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.