தேனி:கோகிலாபுரத்தை சுற்றி உள்ள ஏழு கிராமங்களில், கால்நடைகளுக்கு அடைப்பான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த விவசாயி சசிகுமாருக்கு சொந்தமான 10 மாடுகள் "அடைப்பான் நோயால்'' அடுத்தடுத்து இறந்தன. இதனை தொடர்ந்து இந்நோய் மேலும் பரவாமல் இருக்க, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, வாய்க்கால்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, ஆனைமலையான்பட்டி, சின்னஓவுலாபுரம், முத்துலாபுரம், உத்தமபாளையம் கிராமங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் அடைப்பான்நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கால்நடை இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது: அடைப்பான் நோய் எளிதில் பரவக்கூடியது. எனவே இந்நோய் பாதித்த கிராமத்திலும், சுற்றிலும், 8 கி.மீ., தொலைவிற்குள் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு இந்நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும். இந்த தடுப்பூசி போடுவதற்கு 8 டாக்டர்கள், பணியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் ,இந்நோய்க்கான தடுப்பூசி போடப்படும். நோய் பாதிப்பு இல்லாத இடங்களில் தடுப்பூசி போடக்கூடாது. எனவே மற்ற பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்,என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.