திண்டிவனம்: புதுச்சேரி, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான வழக்கில், வரும் 18ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது, 10ம் வகுப்பு தேர்வில், ஆள் மாறாட்டம் செய்ததாக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நடந்து வருகிறது.
அரசு தரப்பில், விசாரணை அதிகாரியான, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் உள்ளிட்ட, 57 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்தது. இதையடுத்து, மாஜிஸ்திரேட் விசாரணை, வழக்கறிஞர்களின் விவாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. அரசு தரப்பில் வழக்கறிஞர் அம்ஜத் அலி ஆஜரானார்.
நேற்று முற்பகல், 11:00 மணிக்கு துவங்கிய விவாதம், 11:45 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை, வரும், 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாஜிஸ்திரேட் சரிதா உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.