மதுரை: நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் (முத்தாலபுரம்) திருவிழா கோஷ்டி மோதலின்போது, மக்கள் ஊரை விட்டு வெளியேறியதாக தாக்கலான வழக்கில், அங்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் வக்கீல் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு: எனது சொந்த ஊர் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி(முத்தாலபுரம்). அங்கு 2012 ஏப்.,14 ல் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஒரே சமூகத்தை சேர்ந்த இரு கோஷ்டிகளிடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கோஷ்டியை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். பதினெட்டாம்படியான் புகார்படி, விளாம்பட்டி போலீசார் 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 24 பேர் கைது செய்யப்பட்டனர். பிரச்னையால், 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும். கலெக்டரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஊரை விட்டு வெளியேறியவர்களை, மீண்டும் ஊருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஜின்னா, அரசு சிறப்பு வக்கீல் கோவிந்தன் ஆஜராகினர். நீதிபதிகள்," ஊர்மக்களுக்கு, தகுந்த பாதுகாப்பு அளிக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்தரப்பில் ஜன., 22 ல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.