புதுடில்லி: வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்புவர்களில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரண்டாவது இடத்தில்சீனா:
கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்நாடான இந்தியாவுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர்.
அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன. குறிப்பாக, வளரும் நாடுகளில், தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகள் தான், அதிக அளவில், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் நாட்டினர் மூலம் ஏராளமான பணத்தை பெற்றுள்ளன.மேலும், வளரும் நாடுகளில் இருந்து ஏராளமானோர் குடியேறும் நாடாக, அமெரிக்கா விளங்குகிறது. அதே நேரத்தில், ஏராளமான பணத்தை அனுப்பும் நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்து நம் நாட்டிற்க்கு பணம் அனுப்புகிறோம் ... ஆனால் இந்திய அரசியல்வாதிகளின் செயல்களை கண்டு மிக வேதனைப்படுகிறோம் ... எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ... ஏன் இந்த நிலை ?... இந்திய அரசியல்வாதிகளை கொண்டுவந்து அரபு நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலில், பாலைவனத்தில் ரோடுபோட வைக்க வேண்டும் ... அப்போதாவது அவர்கள் மனிதர்களாக மாறுவார்களா என்று தெரியவில்லை ...
வெளிநாட்டில் சென்று அதிகமாக வருவாய் ஈட்டினால் சரி ,அதிகமானோர் 10000 இந்திய ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர் .இதற்காக அங்கு சென்று கஷ்ட பட தான் வேண்டுமா ?ஏதொ ஆடு மாடுகளை ஏற்றி செல்வது போல் வண்டியில் காலை 600 மணிக்கு முன்பாக வீட்டில் இருந்து கிளம்பி இரவு 1000 மணிக்கு மேல் தான் தங்களது இருப்பிடத்திற்கு திருப்புகின்றனர் .
வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் நெடுநாள் வேலைசெய்துவிட்டு நாடுதிரும்பும் தொழிலாளர்களுக்கு சொந்ததொழில் செய்ய வங்கிகள் மூலம் கடன் வழங்கவேண்டும். தேர்தல் நேரங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓட்டுரிமையை பாதுகாக்கும் வண்ணம் தூதரகம் மூலமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படவேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தும் போலி நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாரிசுகளுக்கு கல்வி நிறுவனங்களில் போதிய இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். தொழிலாளர்களை வேலையில் அமர்த்தும் வெளிநாட்டு நிறுவனங்கள், அந்தந்த நாட்டு தொழிலாளர் நலச்சட்டங்கள் வரையறுத்துள்ள ஊதியங்கள், தொழிலாளர்களுக்கு முறையே கிடைக்கப்பெற, தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். நமது நாட்டு விமான போக்குவரத்து துறையான, ஏர் இந்தியா -வை சீரமைத்து, தொய்வில்லாத, சீரான வழித்தடத்தில் சிறப்பான முறையில் சேவைகள் இயக்கப்பட வேண்டும். நமது அரசு செய்யுமா?................
இவர்கள் மதிப்புமிகு இந்தியா செல்வங்கள்.., அந்நிய செலவாணிகள் இந்தியா உலக சந்தையில் நெஞ்சம் நிமிர்ந்து நிற்க உதவுகிறது. வெளிநாடுகளில் உழைக்கும் இவர்கள் சிறந்த வேர்வை துளிகள்.., இவர்களுக்கு சிறந்த சலுகைகள் மத்திய மாநில அரசுகள் அளிக்கவேண்டும்..,இவர்கள் பிரச்சனைகள் தீர்க்க அரசு உதவி இலவச தொலை பேசி சேவை மையம்.., மத்திய..,மாநில அரசுகள் ஏற்படுத்த படவேண்டும் - பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.