நொய்டா: டில்லி அருகே, நொய்டாவில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்றாவது நபரை போலீசார் கைது செய்தனர் டில்லி அருகேயுள்ள நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண், அங்குள்ள, ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்தார். 4ம் தேதி பணிக்கு சென்றவர், இரவில், சக தோழிகளுடன் வீட்டுக்கு புறப்பட்டார். வெகு நேரம் ஆகியும் அப்பெண் வீடு போய் சேராததால், பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். 5ம் தேதி காலை, அவரது, வீடு அருகே, அப்பெண்ணின் உடல், எரிந்த நிலையில் கிடந்தது. ஆரம்பகட்ட மருத்துவ அறிக்கையில், அப்பெண் கற்பழிக்கப்பட்டரா என்பது பற்றி உறுதியாக கூறப்படவில்லை. மருத்துவர்களின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து போலீசார் உள்ளனர். இருப்பினும், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு பலியான சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், நொய்டா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நொய்டாவில், அந்த பெண் வேலை பார்த்த நிறுவனத்தின், சக ஊழியர்கள் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகப்படும்படியான மூவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், நரேஷ் மற்றும் கைலாஷ் என்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மொபைல் போன் அழைப்புகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு கேமரா உதவியுடன், சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கொலையான பெண் வேலைபார்த்த நிறுவனத்தில், நரேஷ் வேலை பார்த்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அப்பெண்ணை மணந்து கொள்வதாக நரேஷ் உறுதியளித்துள்ளார். ஆனால், நரேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்ததும், அப்பெண் நரேசை தவிர்த்து வந்துள்ளார். மேலும், போலீசில் புகார் செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன நரேஷ், அந்த பெண்ணை தூக்கி சென்று, அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆலையில் வைத்து கொலை செய்துள்ளார். அவருக்கு, கைலாஷ், உதய்வீர் உதவியுள்ளனர். நரேஷ் போலீசில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, மூன்றாவது நபரான உதய்வீரை போலீசார் நேற்று கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இப்போது கைதாகியுள்ளவர்களில் ஒருவர், கொலையான பெண்ணின் வீடு புகுந்து, கற்பழிக்க முயன்று உள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்தபோது, அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை போலீசார் செய்து இருந்தால், கொலை நடந்து இருக்காது என, பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், காவலர் ராகேஷ் ஆகியோர் இலாகா பூர்வ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.